மதுரை சித்திரைத் திருவிழா ....
மூன்றாம் நாள் இரவில் சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் உலா வருவர்.
அடியார்கள் வேண்டுவோர், வேண்டுவனவற்றை வழங்கவே மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
திருவிழாத் தத்துவமும் பலனும்
மூன்றாம் நாள் திருவிழா மூவினையும் , முப்புத்தியும், முக்குணமும், முப்பிறப்பும் , முக்குற்றமும் , முப்பற்றும் முதலானவற்றை ஒழித்தற் பொருட்டாகும். மூன்றாம் நாள் இரவு இராவணனது உடம்பின் மேலுள்ள கைலாச பர்வதத்தில் இறைவன் எழுந்தருளுகின்றார். இவ்வாகனம் கைலாச பர்வத வாகனம் என கூறப்படுகிறது.
இராவணன் ஆணவம் முதிர்ந்த ஜீவாத்மா , அகங்காரத்தால் எதுவும் செய்ய கூசாதவன்.
அவன் தனது திமிரால் கைலாச பர்வதத்தைத் தூக்கி எடுக்க, சிவபெருமான் கால் விரலை ஊன்ற, அவன் அலறி கை நரம்பால் வீணை உண்டாக்கி சாமகானம் பாடினான் .
இறைவன் மகிழ்ந்து அவனுக்கு அருள்புரிந்தார்.
இது ஸ்திதி அல்லது காப்பாற்றுதலைக் குறிக்கும்.
இதிலிருந்து இறைவனுக்கு தீங்கு செய்தவர்களும் அடங்கி நின்று வழிபடுவாராயின் அவனுக்கும் இறைவன் அருள்புரிவான் என்பதும், அவனது பெருந்தகைமையும் நன்கு விளங்குகிறது.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்

கைலாசபர்வத வாகனம் |
காமதேனு வாகனம் |

மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் பொருட்டு ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகும்.
அந்நூலிலிருந்து ...
நேரிசை வெண்பா
மதம்பரவு முக்கண் மழகளிற்றைப் பெற்றுக்
கதம்பவனத் தேயிருந்த கள்வி - மதங்கன்
அடியார்க் குடம்பிருகூ றாக்கினாள் பார்க்கிற்
கொடியார்க் குளகொல் குணம். 3
மதுரை சித்திரைத் திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
அழகிய படங்கள். நல்ல வர்ணனை.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteசித்திரை திருவிழா படங்கள் அழகாக உள்ளது. வாகனங்களைப்பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியது நன்று. காமதேனு வாகனம் அழகாக உள்ளது. அருள் தரும் மீனாட்சி அம்மனையும், சுவாமியையும் சேவித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அடியவர்களுக்கு இப்போது வேண்டியது நிம்மதி, நோய் தொற்று மறைய வேண்டும்.
ReplyDeleteவேண்டிக் கொள்வோம் காமதேனு வாகனத்தில் வரும் அன்னையிடம்.
படங்கள் அழகு, பதிவு அருமை.
சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் - இந்த வருடம் இல்லை என்பதில் வருத்தம் தான் - ஆனாலும் சென்ற வருட படங்களில் பார்க்க மகிழ்ச்சி.
ReplyDelete