04 May 2020

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்

மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்

இரண்டாம் நாள் சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா வருவர். இறைவன் ஐம்பூதங்களையும் அடக்கி தன் ஆணை வழி செலுத்துபவன் என்பதை இவ்வாகனம் உணர்த்துகிறது.





















திருவிழாத் தத்துவமும் பலனும்  

இரண்டாம் நாள் திருவிழா தூலம், சூக்குமம் என்னும் இருவகை யாக்கையும் நீக்கிக் கொள்ளும் பயனை குறிப்பதாகும். இரண்டாம் நாள் இரவு சிவபெருமான் வீற்றிருப்பதாக விளங்கும் பூத வாகனம் விருத்திக்கிரம  சங்கராக்  கோலம் என்பர் . பூதகணங்களின் தலைவராக விளங்கும் சிவபெருமான் உலக உயிர்களை உய்விக்கும் பொருட்டு இவ்வருட்கோலத்தில் எழுந்தருளுகின்றார்.



மதுரை மீனாட்சியம்மையின் புகழ் பாடும் பொருட்டு ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை ஆகும்.

அந்நூலிலிருந்து ...


கட்டளைக் கலித்துறை

இராநின் றதுஞ்சொக்க ரெண்டோள் குழைய விருகுவட்டாற்
பொராநின் றதுஞ்சில பூசலிட் டோடிப் புலவிநலம்
தராநின் றதுமம்மை யம்மண வாளர் தயவுக்குள்ளாய்

வராநின் றதுமென்று வாய்க்குமென் னெஞ்ச மணவறையே. 2



மதுரை சித்திரைத்   திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. படங்கள் அனைத்தும் அழகு. நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    படங்கள் அனைத்தும் அழகுடன் சிறப்பாக உள்ளது. பூத வாகனத்தின் விபரங்கள் அறிந்து கொண்டேன். உங்களால் இறைவனை தரிசிக்கும் பேறு பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. அழகிய அருட்கோலங்கள்.

    ReplyDelete