வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள் ...
1.குடகு மலை காற்றில்
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்
காவிரி நதியின் பிறப்பிடமாக கருதப்படும் தலைக்காவிரி பாகமண்டலாவில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது என்றும் அதன் காட்சி பதிவுகளையும் முந்தைய பதிவில் கண்டோம் .
பின் கடைசிப் பகுதியில் பாகமண்டலேஸ்வரா கோவிலின் அமைப்பு மற்றும் அழகை ரசித்தோம் .
இன்று திரிவேணி சங்கமம்...
திரிவேணி சங்கமம் எனும் வடமொழிச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள்.
காவேரி ஆறு, தன் துணை ஆறான கன்னிகே ஆற்றுடன், சங்கமிக்கும் இவ்விடத்தில் தெய்வீக ஆறான சுஜ்யோதி ஆறும் தரைக்கடியில் இவற்றோடு கலப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இம்மூன்று ஆறுகள் ஒன்றாக கலக்கின்ற காரணத்தால் இந்த இடம் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது.
கொடவா மற்றும் இந்து மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்த பகுதி திகழ்கிறது. துள சங்கிரமண திருவிழாவின்போது பக்தர்கள் தலைக்காவேரிக்கு செல்லும் முன்னர் இந்த திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுகின்றனர்.
பசுமையான இடம் , தண்ணீரின் அளவு மிக குறைவாக இருந்தாலும் , குழந்தைகள் அனைவரும் மிக ஆசையாக இங்கு குளிர்த்தார்கள்.
தொடரும் .....
அன்புடன்
அனுபிரேம்
திரிவேணி சங்கமம் கண்டேன்,
ReplyDeleteஅருமை.
திரிவேணி சங்கமம் என்றதும் அலஹாபாத் நினைவுதான் வந்தது. அதே போல தலைக்காவேரி அருகிலும் ஒரு திரிவேணி சங்கமமா?
ReplyDeleteபடங்கள் நன்றாக இருந்தன
திரிவேணி சங்கமம் - தகவல்கள் நன்று.
ReplyDeleteஎனக்கும் அலஹாபாத் நினைவு தான் வந்தது.
படங்கள் அனைத்தும் சிறப்பு.