11 March 2020

காவேரி நிசர்காதமா

வாழ்க வளமுடன் 




முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 

2. கும்பஜ்...

3.திப்புவின் கோடை கால மாளிகை...

4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்

5.தங்கக்கோயில் -பைலகுப்பே


தங்கக்கோவில் பார்த்துவிட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம்  காவேரி  நிசர்காதமா.

காவேரி நிசர்காதமா என்பது காவேரி நதியில் அமைந்துள்ள தீவாகும்.

காவேரி நிசர்காதமா மடிகேரி பஸ் நிலையத்திலிருந்து 29 கி.மீ. தொலைவிலும்,
துபாரே யானை முகாமிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், பைலாகுப்பேயிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும்,
குஷால் நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

இது கூர்க்கில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.


முகப்பு 

தொங்கும் பாலம் 


அடர்ந்த மூங்கில் தோப்புகள், சந்தனம் மற்றும் தேக்கு மரங்கள் நிறைந்து பரந்து விரிந்த 64 ஏக்கர் நிலப்பில் இந்தத் தீவு அமைந்துள்ளது.

 1988 ஆம் ஆண்டு வனத் துறையால் இந்தத் தீவு சுற்றுலாத் தலமாக உருவாக்கப்பட்டது.

இந்தத் தீவை அடைய ஒரு தொங்கும் கயிற்றுப் பாலம் உதவுகிறது.








இந்தத் தீவில் மான் பூங்கா (deer park), முயல் பூங்கா (rabbit park ), மயில் பூங்கா (peacock park), அர்ச்சிட் மலர்ப் பூங்கா (Orchidarium) ஆகிய பூங்காக்கள் அமைந்துள்ளன.

இங்கு கிளிகள், மரங்கொத்திகள் மற்றும் பட்டாம்பூச்சி வகைகள் ஆகியவற்றையும் காணலாம். படகுச் சவாரியும் இங்கு உள்ளது.


முயலார் 



கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் 



அங்கு  உடைந்த மரங்களிலும் பல வண்ண ஓவியங்களை வரைந்து இருந்தது  பார்க்க அழகாக இருந்தது .


படகு சவாரி 




படகு சவாரியில்   எடுத்த சில மாலை  நேர காட்சிகள் ..











பயணிகள் குறிப்பிட்ட பாதுகாப்பான இடங்களில் நீரில் இறங்கவும்  அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு மரத்தின் மேல் அமைக்கப்பட்ட காட்டேஜ்களும், வனத்துறையினர் நடத்தும் விருந்தினர் விடுதியும் உள்ளன. .

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை




தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்


7 comments:

  1. மனதுக்கு இதம் அளிக்கும் இடமாக இருக்கிறது. படங்கள் நன்று.

    ReplyDelete
  2. படகுச் சவாரியில் எடுத்த மாலை நேரக்காட்சிகள் கவர்கின்றன.  பசுமையான இடம்.

    ReplyDelete
  3. இங்கே சென்றிருக்கிறேன். ரம்மியமான இடம்.

    படங்களும் பகிர்வும் நன்று.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    தொங்கும் பலத்துடன் உள்ள காவேரி நிசர்காதமா தீவு மிக அழகாக உள்ளது. இந்த மாதிரி இடங்களை பார்க்கும் பதிவை தந்தமைக்கு முதலில் தங்களுக்கு நன்றி.

    முயலார், கிளிகளார் அனைவரும் அழகாக உள்ளார்கள். படகு சவாரியில் மாலை நேரத்து காட்சிகள் அழகாக உள்ளது. காணொளியில் கிளிகளின் உல்லாசம் மனதை கவர்கிறது. மொத்தத்தில் பசுமையான இடத்தைப்பார்க்க அருமையாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. படங்கள் அந்த இடத்தைப் பார்க்கும் ஆசையை தூண்டுகிறது.
    ரம்யமான இடம்.
    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  6. படகு சவாரியில் எடுத்த மாலைநேரக்காட்சி படங்கள் அழகு. கொஞ்சும் கிளிகள், முயலார் அழகா போஸ் கொடுக்கிறாங்க. மனதுக்கு இனிமை தரும் படங்கள்.

    ReplyDelete
  7. படங்கள் அனைத்தும் அழகு. படகுப் பயணத்தில் எடுத்த படங்கள் சிறப்பு.

    ரம்மியமான இடமாகத் தெரிகிறது.

    ReplyDelete