வாழ்க நலமுடன்
இந்த வருடம் பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்ற போது எதிர்பாராமல் கடைசி நாள் அன்று இரவு, ஸ்ரீரங்கம் சென்று சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது.
மிக அருமையான தரிசனம், அன்று எடுத்த படங்கள் இன்றைய பதிவில் ...
மிக அருமையான தரிசனம், அன்று எடுத்த படங்கள் இன்றைய பதிவில் ...
சுவாமி நம்மாழ்வார் |
ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்கள்
நம்பெருமாள் திருமஞ்சனம் |
முந்தைய பதிவுகள் ..
5.நம்பெருமாள் அழகு 5 - இராப்பத்து உற்சவம்
6.நம்பெருமாள் அழகு 6 - திருக்கைத்தல சேவை மற்றும் வேடுபறி உற்சவம்
7.ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷம் - " திருவடி தொழல் "
தொடரும் ...
திருவாய்மொழி
பத்தாம் பத்து
பத்தாம் திருவாய்மொழி – முனியே
ஆழ்வார் எல்லையற்ற அன்பால் நைந்து திருமாலைத் தாம் சேர்ந்தமையை அருளிச்செய்து நூலைத் தலைக்கட்டுதல்
முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! * என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே! என்கள்வா! *
தனியேனாருயிரே! என்தலைமிசையாய்வந்திட்டு *
இனிநான்போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேல் என்னையே. (2)
1 3766
மாயம்செய்யேல் என்னை உன்திருமார்வத்துமாலைநங்கை *
வாசம்செய்பூங்குழலாள் திருவாணைநின்னாணைகண்டாய் *
நேசஞ்செய்துஉன்னோடு என்னைஉயிர்வேறின்றிஒன்றாகவே *
கூசஞ்செய்யாதுகொண்டாய் என்னைக்கூவிச்கொள்ளாய் வந்தந்தோ!
2 3767
கூவிக்கொள்ளாய்வந்தந்தோ! என்பொல்லாக் கருமாணிக்கமே! *
ஆவிக்கு ஓர்பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் நான் *
மேவித்தொழும்பிரமன்சிவன் இந்திரனாதிக்கெல்லாம் *
நாவிக்கமலமுதற்கிழங்கே! உம்பரந்ததுவே.
3 3768
உம்பரந்தண்பாழேயோ! அதனுள்மிசைநீயேயோ! *
அம்பரநற்சோதி! அதனுள்பிரமன்அரன்நீ *
உம்பரும்யாதவரும்படைத்த முனிவன்அவன்நீ *
எம்பரம்சாதிக்கலுற்று என்னைப்போரவிட்டிட்டாயே.
4 3769
போரவிட்டிட்டு என்னை நீபுறம்போக்கலுற்றால் * பின்னையான்
ஆரைக்கொண்டு எத்தையந்தோ! எனதென்பதென்? யானென்பதென்! *
தீரஇரும்புண்டநீரதுபோல என்னாருயிரை
ஆரப்பருக * எனக்கு ஆராவமுதானாயே.
5 3770
அன்புடன்
அனுபிரேம்
நாங்க பிப்ரவரியில் போனோம். மகளுக்காக திருமனஞ்சேரி போய்ட்டு அப்படியே ஸ்ரீரங்கம் வந்து பெருமாளை வணங்கினோம். கூட்டமில்லாம அமைதியாய் இருந்தது கோவில். தரிசனம் அருமையாய் கிட்டியது
ReplyDeleteபடங்கள் அழகு.
ReplyDelete