07 March 2020

திருக்கைத்தல சேவை மற்றும் வேடுபறி உற்சவம்

நம்பெருமாள் அழகு  6 - திருக்கைத்தல சேவை மற்றும்  வேடுபறி உற்சவம்

முந்தைய பதிவுகள் .. 


5.நம்பெருமாள் அழகு 5 - இராப்பத்து உற்சவம்




இராப்பத்து 7ம்நாள்

இன்று நம்பெருமாள்  "திருக்கைத்தல சேவை" சாதிப்பார்,
அதாவது பல்லக்கு இல்லாமல் நம்பெருமாளை அர்ச்சகர்கள் தம் திருக்கரங்களில் வைத்து எழுந்தருளப்பண்ணுவர்.











இராப்பத்து 8ஆம் நாள்

இன்று திருமங்கை ஆழ்வார் வேடுபறி(வேடர்பறி!) 
பெரிய கோவில் ஆலிநாடன் திருவீதியில்  (ஆலிநாடனான திருமங்கை ஆழ்வார் அமைத்தது),
உள் மணல்வெளியில் நடைபெறும்.

நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடு செய்வார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள மணல்வெளிப் பகுதியில் நம்பெருமாள் வையாளி நடைபெறும்.

இதையடுத்து திருமங்கை மன்னன் மற்றும் அவரைச் சேர்ந்தோர் கொள்ளையடித்துச் செல்லும் காட்சி அரங்கேரும்.
இறைவனிடமே கொள்ளையடித்ததை உணர்ந்து திருமங்கைமன்னன் நம்பெருமாளிடம் சரணாகதி அடையும் வைபவமும் நடைபெறும்.










சூதனாய்க்கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்தகாலம் *
மாதரார்கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்துவேனை *
போதரேயென்றுசொல்லிப் புந்தியுள்புகுந்து * தன்பால்
ஆதரம்பெருகவைத்த அழகனூர் அரங்கமன்றே.

திருமாலை -16
887

விரும்பிநின்றேத்தமாட்டேன் விதியிலேன்மதியொன்றில்லை *
இரும்புபோல்வலியநெஞ்சம் இறையிறைஉருகும் வண்ணம் *
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில் கொண்ட *
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணை களிக்குமாறே!


திருமாலை -17
888


இனிதிரைத்திவலைமோத எறியும் தண்பரவைமீதே *
தனிகிடந்து அரசுசெய்யும் தாமரைக்கண்ணன் எம்மான் *
கனியிருந்தனையசெவ்வாய்க் கண்ணணைக்கண்டகண்கள் *
பனியரும்புஉதிருமாலோ! என்செய்கேன்பாவியேனே?


திருமாலை -18
889

தொடரும்...

முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


அன்புடன் 
அனுபிரேம் 

3 comments:

  1. கண்கொள்ளா காட்சிகள்.

    ReplyDelete
  2. மனதிற்கு நிறைவு தரும் காட்சிகள். வேடுபறி ஒரு முறை பார்த்ததுண்டு.

    ReplyDelete
  3. அழகான படங்களுடன்
    அரங்கனின் தரிசனம்...

    ReplyDelete