22 March 2020

நீர் என்னும் அமிழ்தம்..


உலக தண்ணீர் தினம் இன்று, அதற்கான  சிறப்பு பதிவு இன்று ...  ..





11 ஆம்குறள்.... உலகத் தொடர்ச்சியை நிலைநிறுத்துவதால் வான்மழை அமிழ்தம் எனப்படுகிறது என்கிறது.


குறள்:11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

பால்: அறத்துப்பால்
 இயல்: பாயிரவியல்
 அதிகாரம்: வான்சிறப்பு


குறள் விளக்கம்:

மழை தவறாது பெய்தலால் இந்த உலகம் (உயிர்கள்) வாழ்ந்து வருகின்றது. ஆகையால், அந்த மழை உயிர்களுக்குச் சாவா மருந்து (அமிர்தம்) என்று சொல்லத் தக்கது.



மணக்குடவர் உரை:

மழைவளம் நிலை நிற்றலானே உலகநடை தப்பாது வருதலான், அம்மழைதான் உலகத்தார் அமுதமென்றுணரும் பகுதியது. இஃது அறம் பொரு ளின்பங்களை யுண்டாக்குதலானும், பலவகைப்பட்ட உணவுகளை நிலை நிறுத்தலானும். இம்மழையினை மற்றுள்ள பூத மாத்திரமாக நினைக்கப் படாதென்ற நிலைமை கூறிற்று.

பரிமேலழகர் உரை:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் - மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்;

தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று - அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. ('நிற்ப' என்பது 'நின்று' எனத் திரிந்து நின்றது. 'உலகம்' என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின, உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை 'அமிழ்தம் என்று உணர்க' என்றார்.).

மு. வரதராசன் உரை:

மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.







மேலிருக்கும் படங்கள் ஒன்று போல இருந்தாலும் அவைகளில் தண்ணீர் விழும் முறை வேறாகவும் , அழகாகவும் இருக்கும் ..




























இப்படங்கள் எல்லாம் மாமா வீட்டில் எடுத்தவை,பார்க்கும் போது  மனதிற்கு புத்துணர்ச்சி தரும் இடமும் , படங்களும் ...

 உலக தண்ணீர் தினம் இன்று, தண்ணீரின் தேவை என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும் அதை உணர்ந்து .....

தண்ணீரை சிக்கனமாய் பயன்படுத்தி நம் குழந்தைகளுக்கும் , பிற உயிர்களுக்கும் பாதுகாப்பாய் சேமிப்போம் ..


அன்புடன்
அனுபிரேம்



6 comments:

  1. அழகான படங்களுடன்
    அருமையான பதிவு...

    ReplyDelete
  2. மனமகிழ்வூட்டும் படங்கள் மற்றும் தகவல்கள்.  மழை பொழிந்து பூமியைக் குளிர்விக்கட்டும்.  தண்ணீரின் அருமையை மனிதன் உணர்ந்து சிக்கனமாகக் கையாள இறைவன் அருளட்டும்.

    ReplyDelete
  3. தண்ணீரின் முக்கியம் குறித்து எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    படங்கள் அழகு.

    ReplyDelete
  4. நானும் நேற்று தண்ணீர் பதிவு போட்டேன்.
    பதிவும், படங்களும் அழகு.

    மாமாவீட்டு தோட்டம் அழகு.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    நீர் என்பது இறைவன் நமக்களித்த அமிர்தம் போன்றதுதான். அதை உலக தண்ணீர் தினத்தன்று அழகான பதிவாக உணர்த்தியிருக்கிறீர்கள். நீரின் தேவையை உணர்ந்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென எல்லோரும் நினைக்க வேண்டும். நீங்கள் எடுத்த அத்தனை இயற்கைப் படங்களும் மிக அழகாக உள்ளன. பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. தண்ணீர் சேமிப்பும் சிக்கனமும் அவசியம்.
    நல்ல பகிர்வு படங்கள் அழகு.

    ReplyDelete