பெரிய பெருமாள் திருநட்சத்திரம் ... பங்குனியில் – ரேவதி
பரம்பொருள் நாராயணனே, பெரிய பெருமாளாக ஸ்ரீரங்க விமானத்துடன், ப்ரம்மா வழிபடுவதற்காக ஸத்யலோகம் வந்தடைந்தார். பிறகு இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த ரகுகுல மன்னர்கள் வழிபடுவதற்காக அயோத்தி வந்தடைந்தார்.
இராவண வதம் முடிந்து, ஸீதா ராம பட்டாபிஷேகம் முடிந்து விபீஷணன் இலங்கை திரும்பும் சமயத்தில், இராமன் தன் திருவாராதன பெருமாளான பெரிய பெருமாளை விபீஷணனுக்கு கொடுத்தான்.
விபீஷணன் திரும்பிச் செல்லும் வழியில் ஸ்ரீரங்கத்தில் சந்தியாவந்தனம் செய்வதற்காக ஸ்ரீரங்க விமானத்தை நிலத்தில் வைக்க, “வண்டினம் முரலும் சோலை மயிலினமாலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை” (திருமாலை) என்று ஸ்ரீரங்க அழகிலே திளைத்து எம்பெருமான் அங்கேயே தெற்கு நோக்கி எழுந்தருளினார் .
அனைவரையும் துன்பங்கள் நீக்கி எம்பெருமான் காத்து அருள வேண்டும் .
அன்புடன்
அனுபிரேம்...
பெரிய பெருமாள் வாழி திருநாமம்!
திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
செய்யவிடைத்தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில்வீற்றிருக்கு மிமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே
இராவண வதம் முடிந்து, ஸீதா ராம பட்டாபிஷேகம் முடிந்து விபீஷணன் இலங்கை திரும்பும் சமயத்தில், இராமன் தன் திருவாராதன பெருமாளான பெரிய பெருமாளை விபீஷணனுக்கு கொடுத்தான்.
விபீஷணன் திரும்பிச் செல்லும் வழியில் ஸ்ரீரங்கத்தில் சந்தியாவந்தனம் செய்வதற்காக ஸ்ரீரங்க விமானத்தை நிலத்தில் வைக்க, “வண்டினம் முரலும் சோலை மயிலினமாலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை” (திருமாலை) என்று ஸ்ரீரங்க அழகிலே திளைத்து எம்பெருமான் அங்கேயே தெற்கு நோக்கி எழுந்தருளினார் .
பெரியாழ்வார் திருமொழி - நான்காம்பத்து
ஒன்பதாம் திருமொழி - மரவடியை
மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ *
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து
உலகாண்டதிருமால்கோயில் *
திருவடிதன்திருவுருவும் திருமங்கை
மலர்கண்ணும்காட்டிநின்று *
உருவுடையமலர்நீலம் காற்றாட்ட
ஓசலிக்கும்ஒளியரங்கமே. (2)
412 -1
தன்னடியார்திறத்தகத்துத் தாமரை
யாளாகிலும்சிதகுரைக்குமேல் *
என்னடியார்அதுசெய்யார் செய்தாரேல்
நன்றுசெய்தாரென்பர்போலும்*
மன்னுடையவிபீடணற்கா மதிளிலங்கைத்
திசைநோக்கிமலர்கண்வைத்த *
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே (2)
413 - 2
கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும் *
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான் *
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி *
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே.
414 - 3
பதினாறாமாயிரவர் தேவிமார்
பணிசெய்ய * துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில் *
புதுநாண்மலர்க்கமலம் எம்பெருமான்
பொன்வயிற்றில்பூவேபோல்வான் *
பொதுநாயகம்பாவித்து இருமாந்து
பொன்சாய்க்கும்புனலரங்கமே.
415 - 4
ஆமையாய்க்கங்கையாய் ஆழ்கடலாய்
அவனியாய்அருவரைகளாய் *
நான்முகனாய்நான்மறையாய் வேள்வியாய்
தக்கணையாய்த்தானுமானான் *
சேமமுடைநாரதனார் சென்றுசென்று
துதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில் *
பூமருவிப்புள்ளினங்கள் புள்ளரையன்
புகழ்குழறும்புனலரங்கமே.
416 - 5
மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி *
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில் *
பத்தர்களும்பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும்பரந்தநாடும் *
சித்தர்களும்தொழுதிறைஞ்சத்
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே.
417 -6
அனைவரையும் துன்பங்கள் நீக்கி எம்பெருமான் காத்து அருள வேண்டும் .
ஓம் நமோ நாராயணாய நம!!
அன்புடன்
அனுபிரேம்...
நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி சார் ..
Deleteபெரிய பெருமாள் படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம்.
ReplyDeleteநேர்ல அவன் அவ்வளவு நேரம் நமக்குத் தருவதில்லையே..
பாசுரங்களை ரசித்தேன். கொஞ்சம் வார்த்தை பிரித்து எழுத முயற்சித்தால் படிப்பவர்களுக்கு நன்றாகப் புரியும் என்பது என் எண்ணம்.
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர் கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
..... என்பது போல.
தங்களின் விரிவான கருத்திற்கு நன்றி சார் ..
Deleteஆம் பெரிய பெருமாளை எத்துணை முறை தரிசித்தாலும் போதும் என்னும் எண்ணம் வராது ....
பாசுரங்கள் எல்லாம் இப்பொழுது தான் நான் படிக்க ஆரம்பிக்கிறேன் ...அதனால் பிழை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது அதனாலேயே என்னிடம் உள்ள நூலின் முறையில் பகிர்கிறேன் ...
பெருமாள் படங்கள் அனைத்தும் கண்ணுக்கு விருந்து
ReplyDeleteநன்றி ..
Delete