21 March 2020

தனித்திரு, தவிர்த்திடு.....!

வாழ்க வையகம் 




இப்பொழுது பெருநகரங்களில் இருந்து  கிளம்பி கிராமங்களுக்கு
சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறோம்...

நம்மை அறியாமலே ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தொற்றை கடத்துகிறோம்...

மேலும் சொந்த ஊரில் வயதான அப்பா அம்மா இருக்கிறார்கள் என்று அவர்களைப்பார்க்க கிளம்புகிறோம்...



அவர்களுக்கு சென்று நம்மை அறியாமல் நோய் தொற்றை பரப்பும் வாய்ப்பு இருப்பதை மறக்கிறோம்...

மேலும் நாம் பயணம் செய்யும் பேருந்துகள்/ தொடர் வண்டிகள் அனைத்திலும் நம்முடன் பயணம் செய்யும் சக பயணிகளுக்கு தொற்றை கடத்தும் வாய்ப்பை ஏற்படுத்துகிறோம்..

பொறுப்புணர்ந்து அவரவர் வீட்டில் ஊரில் இருப்போம்

இதுவே நல்லது

சொந்த ஊருக்கு சென்று வயதான தாய் தந்தைக்கு பாட்டி தாத்தாவுக்கு தொற்றை பரிசளிப்பதை தவிர்ப்போம்....

அவர்களே சமூகத்தால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.




சமூகத்துக்கு பாதகம்
ஏற்படுத்தும் தனிமனித சுதந்திரத்தை,
சமூகம் எப்போதும்
அடக்கியாக வேண்டிய படிப்பினை,
வரலாற்று காலம்
 தோறும் கொட்டிக்கிடக்கிறது

கொரோனாவுக்காக வரலாறு தன்னை மீண்டும் மீட்டெடுக்க இருக்கிறது...


இனிவரும் நாட்களில் தனிமனித சுதந்திரத்தை விட சமூகத்தின் நலனே முன்னெடுக்கப்படும் ...



ஆணைகள், சட்டங்கள் (1897 ப்ளேக்கு கொள்ளை நோய் தடுப்புச்சட்டம் இப்போது மீண்டும் 2020இல் கோவிட் 2020 ஆக தன்னை புதுப்பித்து வெளியே வந்திருக்கிறது)


தயவு கூர்ந்து வீட்டில் அமைதியாக இருக்கவும் .

நாளைய ஊரடங்கு ஒத்திகையை நாம் சிறப்பான முறையில் பயிற்சி எடுக்க வேண்டும்....

அனைத்து மக்களும் நாளைய பயிற்சியில் பங்கெடுக்க வேண்டும்.

இது இறுதியில் மருத்துவத்துறைக்கும் வைரஸ்க்கும் நடக்கும் யுத்தமாகவே இருக்கும்.....

 இப்போதே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்

இன்னும் ஊரோடு கலக்கிறீர்கள்..

சொந்த ஊருக்கு செல்கிறீர்கள்..

பார்க் பீச் என்று இருக்கிறீர்கள்..

காதுகுத்து திருமணங்களுக்கு செல்கிறீர்கள்..

சின்ன விஷயங்களுக்கு மருத்துவமனைக்கு வருகிறீர்கள்..

இது அனைத்தையும் செய்தால்..

போர் இன்னும் உக்கிரமாகவே மாறும் நிலை வரலாம்.....

மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர்
"பணிமூப்பு பெற்ற மருத்துவர்களையும் ராணுவ வீரர்களையும் மீண்டும் பணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்"

உங்களுக்காக
உங்களைக் காக்க நாங்கள் இங்கு தயாராக இருக்கிறோம்

நமக்காக நீங்கள்
உங்கள் வீட்டில் தனித்திருங்கள்

புரிந்து நடந்து கொள்ளுங்கள் சகோதர சகோதரிகளே..


🙏தயவு செய்து அரசின் வேண்டுகோள்களை கடைப்பிடிக்கவும்,


🙏தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும்,


🙏முக்கியமாக வீட்டின் வருமானத்தில் பங்கேற்காத கல்லூரி/பள்ளி மாணவ மாணவிகள் இனிவரும் நாட்களில் வீட்டில் இருக்கவும்.,


🙏வருமானத்தில் பங்கேற்பவர்கள்
கட்டாயம் வீட்டுக்குள் நுழையும் முன் கை கால் முகம் கழுவி விட்டு உள்ளே நுழையவும்,



🙏 இளைஞர்களே சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்

தென்கொரியாவில் செய்யப்பட்ட ஆய்வில் 20 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட வயதினருக்கு 40% நோய் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது .

அமெரிக்காவிலும் இதே பாணி தொடர்கிறது என்று நம்பத்தகுந்த செய்திகள் வருகின்றன.

தயவு செய்து உங்களது கேளிக்கைகள்/ கூட்டுப்பிரயாணங்கள்/ சந்தோசங்களை தவிர்த்து விட்டு வீட்டில் இருங்கள்,


🙏 அன்பு அப்பாக்களே அன்னைகளே

தயவு கூர்ந்து மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத்தலங்களுக்கு இப்போதைக்கு செல்லாதீர்கள்.

 கடவுள் பக்திக்கும் இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. இருந்த இடத்திலேயே இருந்து இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள்.

விடுமுறை என்று எப்போதும் போல் வழிபாட்டு சுற்றுலா செல்வது இப்போதைக்கு தவறு.



🙏 அன்பு தாத்தா பாட்டிகளே

தயவு கூர்ந்து வீட்டுக்குள் இருங்கள் வெளியே வராதீர்கள்.

உங்களைப்பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
திருமண வைபோகங்கள்/ காதுகுத்து/ திருவிழாக்கள் எதிலும் கலந்து கொள்ள வேண்டாம்.



🙏 அன்பு சகோதர சகோதரிகளே

அடுத்த சில வாரங்களுக்கு தாங்கள் நிச்சயித்து வைத்திருக்கும் நிகழ்வுகள் , திருமணங்கள் , நிச்சயதார்த்த வைபோகங்கள் அனைத்தையும் முடிந்தால் தள்ளிப்போடுங்கள்.

முடியாவிட்டால் எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான நபர்களை வைத்து நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ளுங்கள்.



🙏அன்புள்ள பல்வேறு சமயங்களைச் சேர்ந்த பெரியோர்களே ஆன்றோர்களே

தாங்கள் தங்களின் சமய வழிபாட்டுத்தலங்களில் மக்கள் பெருமளவு கூடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் .

தென்கொரியாவில் சிஞ்சியோஞ்சி தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சென்ற ஒரு மூதாட்டி ( அந்த நாட்டின் 31வது கோவிட் தொற்றாளர்) சுமார் ஆயிரம் பேருக்கு நோயை பரப்பி அந்த நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தார்.

மலேசியாவில் தப்லிக் என்ற இஸ்லாமிய அமைப்பு நடத்திய பெருங்கூட்டத்தில் 10,000 பேர் கலந்து கொண்டனர் அங்கிருந்து பல புதிய நோயாளிகள் உருவாகி அந்த நாட்டின் நிலைமை மோசமாகி இருப்பது உண்மை.

ஆகவே, சமய வழிபாட்டு தலங்களில் மக்கள் ஒன்று கூடுகிறார்கள். மேலும் இறப்பு விகிதம் அதிகம் உள்ள மூத்தோர் அதிகம் கூடுகிறார்கள். இதை நாம் அடுத்த சில வாரங்களுக்கு தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.



🙏 அன்புள்ள தம்பி தங்கைகளே

இது முழு ஆண்டு பரீட்சை முடிந்த பின் விடும் கோடை விடுமுறை அன்று.
நீங்கள் ஆங்காங்கே தெருக்களில் கிரிக்கெட் / கபடி/ வாலி பால்/ கோலிகுண்டு என்று விளையாட்டுகள் பல விளையாடுகிறீர்கள்.
பொதுவான நாட்களில் காண்பதற்கு இனிய காட்சி இது.

ஆனால் இக்கட்டான சமயத்தில் பொது இடங்களில் மக்கள் கலப்பதை தவிர்க்க விடப்பட்டிருக்கும் இந்த விடுமுறையில் வீட்டில் தான் நீங்கள் இருக்க வேண்டும். பக்கத்து வீட்டில் இருக்கும் தோழர் தோழிகளுடன் கூட இப்போதைக்கு விளையாட வேண்டாம்.


-Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை


(இவருடைய தொடர் பதிவுகள் மிகவும் உண்மையாகவும் , பயனுள்ளதாகவும் உள்ளது .எனவே இன்று அவருடைய தகவல்களையே பகிர்கிறேன் .

நன்றி டாக்டர்  )




தனித்திரு, வைரஸ் சங்கிலியை  உடைத்தெழு ...

இது நமது அனைவரின் கடமையாகும் ..பொறுப்பு உணர்ந்து செயல்படுவோம்  ...

நோய் தாக்குதல் இன்றி நம்பிக்கையுடன் எழுவோம் ...


அன்புடன்
அனுபிரேம்






5 comments:

  1. அற்புதமான விளக்கவுரை டாக்டருக்கு நன்றி சொல்வோம்.

    ReplyDelete
  2. Break the Chain.

    விரிவான தகவல்கள். நலமே விளையட்டும். நலமே விளையும்.

    ReplyDelete
  3. சிறப்பு.  எல்லோருக்கும் புரிதல் ஏற்படவேண்டும்.

    ReplyDelete
  4. மிக மிக அருமையான பத்வு அனு!

    டாக்டர் அவர்களுக்கும் நன்றி சொல்லுவோம்.

    மக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைத்தால் கண்டிப்பாக விரைவில் நலம் விளைந்திடும். ஆனால் சில செய்திகள் மனதிற்கு மிகவும் வருத்தம் தருகிறது. வருத்தம் மட்டுமல்ல கோபத்தையும் தருகிறது.

    கீதா

    ReplyDelete
  5. அனைவரும் புரிந்து செயல்பட வேண்டிய காலகட்டம்.

    ReplyDelete