20 February 2020

நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்


வாழ்க வளமுடன் 




முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 

2. கும்பஜ்...

3.திப்புவின் கோடை கால மாளிகை...


அங்கிருந்து அடுத்து நாங்கள் சென்ற இடம்
திபெத்திய புத்த துறவிகளின் மடாலயம் - பைலகுப்பே



மடிக்கரேயில்  முக்கிய சுற்றுலாத்தலம் இந்த  தங்கக்கோயில் அல்லது ‘நம்ட்ரோலிங்’ என்று அழைக்கப்படும் திபெத்திய புத்த துறவிகளின் மடாலம் (Buddhist Monastery).


திபெத்திய கட்டிடக்கலைப் பாணி மற்றும் பாரம்பரியதுடன் இந்த புத்த துறவிகளின் மடாலயம் அமைந்துள்ளது.








இந்த ‘நம்ட்ரோலிங்’ மடாலயம் டுருபவங் பத்ம நோர்பு ரின்போச்சே என்பவரால் 1963 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

குஷால் நகர் எனும் பகுதியில் 4 கி.மீ தாண்டி பைலகுப்பே எனும் இடத்தில் அமைந்திருக்கிறது இந்த தங்கக்கோவில் .

 சீன ஆக்ரமிப்பு காரணமாக திபெத்தை விட்டு வெளியேறி அகதிகளாக வந்தவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அதில் இரண்டாவது பெரிய திபெத்திய குடியேற்றப்பகுதியே பைலகுப்பே. 

 திபெத்திய அகதிகள் குடியேறி வாழும் லுக்சும் சாம்துப்லிங் ((Lugsum Samdupling) மற்றும் டிக்யி லார்ஸோ ((Dickyi Larsoe) என்ற இரண்டு பெரிய குடியிருப்புகள் இங்குக் காணப்படுகின்றன. 1961 ஆம் ஆண்டில் லுக்சும் சாம்துப்லிங்கும், 1966 ஆம் ஆண்டில் டிக்கி லார்ஸோவும் ஏற்படுத்தப்பட்டன.









மடாலயத்தில் தங்க வண்ணத்தில் மின்னும் குரு பத்மசம்பவா , கௌதமபுத்தர், நீண்ட ஆயுசு   கொடுக்கும்  'அமிடாயுஸ்' புத்தர் ... உருவச் சிலைகள் நுண்ணிய சிற்பத் திறனுடன் வடிவமைக்கப்பட்டு நம்மைக் கவர்கின்றன.

மூவரும் நாப்பதடி உயரச்சிலைகளாக  காட்சி  தருகின்றனர் .

நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அமைந்த பூஜை முரசு, பூஜை சக்கரம் மற்றும் கதவுகள் எல்லாம் மிக அழகு .







கோவில் சுவற்றில் திபெத்திய  ஓவியப் பாணியில் வரையப்பட்ட புத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் மற்றும் வஜ்ராயணப் பௌத்த மரபு சார்ந்த கடவுள் ஓவியங்களையும் காணலாம்.

எங்கெங்கு  காணினும் ஓவியங்கள் ....அத்தனையும் மிக அற்புதம் ...ஆனால்  அவைகளின் கதைகள்  பல நமக்கு புரிவது இல்லை .






தொடரும் ..

அன்புடன்
அனுபிரேம்




6 comments:

  1. மிக அழகு, புத்த கோயில்கள் ஒரு வித்தியாசமான அழகாகத்தான் இருக்கும் எங்கும்.

    ReplyDelete
  2. அழகு. அங்கு செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டாது என்ற போதிலும் போய் வந்த உணர்வைத் தந்தது பதிவு. சிறப்பு.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. வித்தியாசமாய், அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  4. அழகான படங்கள். புத்தமத கோவில்களில் இருக்கும் ஓவியங்கள் அழகு. வடக்கில் இருக்கும் சில இடங்களுக்குச் சென்று வந்ததுண்டு.

    ReplyDelete
  5. கம்போடியா,தாய்லாந்து இருப்பவை போலவே புத்தகோயில் இருக்கு. அழகாக நன்றாக இருக்கு.

    ReplyDelete
  6. அழகாக இருக்கிறது. சில ரிவி சேனலில் பார்திருக்கிறேன்.


    ReplyDelete