வாழ்க வளமுடன்
ரோஜா என்கிற பெயர் லத்தீன் மொழியான பிரான்ஸ் மொழியிலிருந்து பிறந்தது. தமிழில் பன்னீர்ப்பூக்கள் என்றும், சிற்றாமரை என்றும் சொல்வர்.
Rosa centifolia என்று தாவரவியலில் குறிப்பிடுகிறார்கள்.
வடமொழியில் சதபத்திரி, தேவ தாருணி, சாருகேஷரா, லாக்ஷா, கந்தாத்யா என்று பல பெயர்கள் உண்டு.
Rose, Persian rose, Cabbage rose என்று ஆங்கிலத்திலும் பல பெயர்களால் அழைக்கிறார்கள்.
குறுஞ்செடியாகவும் குத்துச்செடியாகவும், கொடி போல் படரும் இனமாகவும் ரோஜா வளருகிறது. ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ரோஜா, சிறு செடி முதல் சுமார் ஏழு மீட்டர்(21 அடி உயரம்) அளவு வரை கொடியாகப் படர்ந்தும் வளர்வதுண்டு.
கி .மு 500 ஆண்டுகளுக்கு முன்பே சீனா, பெர்ஷியா, மத்திய தரைக்கடல் நாடுகளில் பயிரிடப்பட்ட பாரம்பரியமும், பெருமையும் ரோஜாவுக்கு உண்டு.
வெண்மை, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, பல வண்ணக்கலப்பு கொண்டது ரோஜா.
சூர்யவம்சம்
பாடல் : ரோசப்பூ சின்ன
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக ஒம் பாட்டு மட்டும் துணையாக
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக
ஒன்ன விட்டேன்
ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக்
கொலுவெச்சிக் கொண்டானினேன்
கொலுவெச்சிக் கொண்டானினேன்
மழ பேஞ்சாத்தானே மண்வாசம்
ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன் கையில்
ரேகை போல சேர்ந்திருப்பேன்
ரேகை போல சேர்ந்திருப்பேன்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி
ஒம் முகந்தான்
ஒம் முகந்தான்
கண்மூடித் தூங்கயில காணும்
கனவெல்லாம் ஒன்னோடதான்
கனவெல்லாம் ஒன்னோடதான்
நெழலுக்கும் நெத்தி சுருங்காம
ஒரு குடையாக மாறட்டுமா
ஒரு குடையாக மாறட்டுமா
மலைமேல் விளக்கா ஏத்திவைப்பேன்
உன்னப் படம்போல் மனசில்
உன்னப் படம்போல் மனசில்
மாட்டிவைப்பேன்
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
ஒம் பாட்டு மட்டும் துணையாக
ஒம் பாட்டு மட்டும் துணையாக
லால்பாக் பூங்காவில் மலர்ந்து சிரிக்கும் பூக்கள் ...
அன்புடன்
அனுபிரேம்
அழகான படங்களுடன் அருமையான தகவல்கள் நன்றி சகோ.
ReplyDeleteரோஜாவைப் பற்றிய புதிய செய்திகள். மகிழ்ச்சி.
ReplyDeleteஎத்தனை மலர்கள் இருந்தாலும் இந்த ரோஜாவுக்கு எப்பவும் மவுசுதான். அழகான படங்கள். தகவல்களும் அருமை.
ReplyDeleteமலர்கள் என்றாலே அதிலிருந்து கண்ணை எடுக்க முடியாது, இதில ரோஜாப்பூக்கள் என்றால் சொல்லவும் வேண்டுமோ அழகோ அழகு.
ReplyDeleteரோஜா ரோஜா :) ரோஜ்ஜா ரோஜா ஆஹா :) அழகான மலர்கள் எங்க தோட்டத்தில் சம்மருக்கு இப்போவே தயாராகிறாங்க :)அழகானமணம் வீசும் பதிவு
ReplyDeleteஅழகான படங்கள். ரோஜா என்றைக்கும் அழகு தான்!
ReplyDeleteநல்ல தொகுப்பு. நல்ல தேடல். சிறப்பு. காதலர் தினத்தில் ரோஜா பதிவு. ம்ம்ம்.....
ReplyDeleteநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
"மலர்களின் ராஜா... அழகிய ரோஜா... " இந்தப் பாடல் கேட்டிருக்கிறீர்களா? தனசேகர் - மாலா பாடியது!
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteரோஜாவின் பல வித பெயர்களை அறிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் அவ்வளவு அழகாக உள்ளது.. ரோஜாவின் அழகுக்கும் மணத்திற்கும் மயங்காதவர் யார்? இன்றைய தினத்தை சிறப்பித்த பதிவு. பாடலும் நன்றாக உள்ளது. அருமையான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.