03 February 2020

ரத சப்தமி ....

தை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாளில் ரதசப்தமி கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் கடந்த சனிக்கிழமை அன்று ரத சப்தமி ....




மலைப்பஸ்வாமி 

சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தனது ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.



சூரிய பிரபை வாகனம்

சூரியன் தன் தென்திசைப் பயணத்தை முடித்துக்கொண்டு ரதசப்தமியன்று வடக்கு நோக்கி பயணப்படுக்கிறார் . இது வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. விவசாயிகளுக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாகும். சூரியனின் தேரோட்டி அருணன்.

சூரிய பிரபை வாகனம் 

சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில்லைக் குறிப்பதாகவும், மற்றும் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது. ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன.

சின்னசே‌ஷ வாகனம்


கருட வாகனம்


சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா சூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழாவாக உள்ளது.


அனுமந்த வாகனம்

ரத சப்தமி அன்று முதல் தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்வதை உணர முடியும். மேலும் இந்த நாள் வசந்த காலத்தின் ஆரம்பம்.

தீர்த்தவாரி


இந்தியாவில் உள்ள அனைத்து சூரியக் கோயில்களிலும் ரத சப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒரிசாவிலுள்ள கோனார்க் கோயில், மோதேரா சூரியன் கோயில் குஜராத், ஆந்திரா அரசவல்லியிலுள்ள சூரியன் கோயில், தமிழ்நாட்டில் சூரியனார் கோயில் போன்றவை சூரியனுக்கான சிறப்பான கோயில்கள்.

ரதசப்தமி புண்ய நாளில்
சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் 7 எருக்கம் இலைகள், மஞ்சள்பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்குமேலே வைத்துக் கொண்டு நீராடுவது நல்லது.


திருமலையில் இன்று  ஒரே நாளில் ஏழு வாகனங்களில்  மலையப்பசுவாமி உலாவருவார் ...

திருப்பதியில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனப்படும் சூரிய ஜெயந்தி உற்சவம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் குறிப்பிடுகிறது.


கல்பவிருட்ச வாகனம்


ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.


ஏழு மலைகள் சூழ அமைந்துள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி ரத சப்தமி விழா திருமலையில்  சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவுக்கு அர்த்த பிரம்மோற்சவம் என்று பெயர்.

சர்வபூபால வாகனம்


பிப்ரவரி 1ஆம் தேதி ரத சப்தமி நாளில்

சூரிய பிரபை வாகனம்,
சின்னசே‌ஷ வாகனம்,
கருட வாகனம்,
அனுமந்த வாகனம்,
தீர்த்தவாரி,
கல்பவிருட்ச வாகனம்,
சர்வபூபால வாகனம்,
சந்திர பிரபை வாகனம் ஆகிய  வாகனங்களில் மலையப்ப சுவாமி பவனி வந்தார் .

சந்திர பிரபை வாகனம்


2420
அழைப்பன் திருவேங்கடத்தானைக்காண * 
இழைப்பன் திருக்கூடல்கூட * - மழைப்பே 
ரருவி மணி வரன்றிவந்திழிய * யானை 
வெருவியரவொடுங்கும்வெற்பு. 


2421
வெற்பென்று வேங்கடம்பாடினேன் * வீடாக்கி 
நிற்கின்றேன் நின்றுநினைக்கின்றேன் * கற்கின்ற 
நூல்வலையில்பட்டிருந்த நூலாட்டிகேள்வனார் * 
கால்வலையில்பட்டிருந்தேன்காண்.

ஓம் நமோ வேங்கடேசாய !

ரதசப்தமி உற்சவம்...திருநீர்மலையில் முந்தைய பதிவு 

அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. வணக்கம் சகோதரி

    ரத சப்தமி குறித்து அழகான விளக்கம்.படித்து ரசித்தேன். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே ரத சப்தமி திருவிழா ஆண்டுதோறும் நாங்களும் கொண்டாடி வருகிறோம்.காலையில் எருக்கம் இலைகள் வைத்து தலைக்கு குளித்து, வாசலில் தேர் கோலமிட்டு, அன்றும் சர்க்கரை பொங்கல், வெங்கல பானையில் செய்து நவகிரஹ பூஜைகள் செய்து சூரிய நாராயணருக்கு நிவேதனம் செய்து வழிபட்டு வருகிறோம். மகிழ்வான பண்டிகை. பீஷ்மரும் அன்றைய உத்தராயண புண்ணிய காலத்திற்காக அம்பு படுக்கையில் காத்திருந்த வரலாறும் ரதசப்தமியை பற்றிய செய்திகளும், பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள். பதிவும், படங்களும் சுவையாகவும், அழகாகவும் இருந்தன.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. ரதசப்தமி உற்சவ விவரங்களும் அழகிய படங்களும் மிக அருமை.

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள்.

    வழமை போல படங்கள் அனைத்துமே அழகு.

    தொடரட்டும் பக்திப் பரவசம்.

    ReplyDelete