தொடர்ந்து வாசிப்பவர்கள்

17 February 2017

ரதசப்தமி உற்சவம்...திருநீர்மலை


திருநீர்மலை ...

    திருநீர்மலை திவ்ய தேசம், சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. தூரத்தில் உள்ளது...இங்கு    ரதசப்தமி உற்சவம்  கடந்த 3.2.2௦17    அன்று நடைப்பெற்றது....


        நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர் என  நான்கு தோற்றங்களில் பெருமாள் அருளும் தலம் திருநீர்மலை.
     இது ஒரு மலைக்கோயில் . மலையிலும், கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. பெருமாள் நான்கு நிலைகளில், மூன்று அவதார கோலங்கத்திலும்  காட்சி தருகிறார்.


     கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனத்தில்  எழுந்தருளுவார். ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார்.

அப்படங்கள் அப்பாவின் பார்வையாக இன்று பவனி வருகிறது...


திருநீர்மலை 1.சூரிய பிரபை

2.ஹனுமந்த வாகனம்
  3.கருட சேவை
4. சேஷ வாகனம்
திருமஞ்சனம், தீர்த்தவாரி


5. குதிரை வாகனம்
6. சிம்ம வாகனம்7. சந்திர பிரபை
அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி, அவுணர்க்

கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது, இரும்பொழில்சூழ்

நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,

நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

(அன்றாயர் குலக்கொடி யோடு
              அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
                உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை
                தடந்திகழ் கோவல் நகர்
  நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்
                 மாமலையாவது நீர்மலையே.)                                                              -   திருமங்கை ஆழ்வார்(1௦78)
அன்புடன்,

அனுபிரேம்

4 comments:

 1. முதல் படம் கண்ணுக்கு குளுமையான தெய்வீகமா இருக்கு மலை உச்சியில் கோயில்கள் எப்பவுமே மிக அருமையான காட்சி .அனைத்து படங்களும் அழகு .அப்பா அனுப்பினாரா படங்களை .நன்றி சொல்லிடுங்க எங்க சார்பா ..

  ReplyDelete
 2. ஒரே நாளில் 7 வாகனங்களிலா? கொடுத்து வைத்தவர்... அனைத்து வாகனங்களிலும் அழகாக காட்சி தாறார்... மிக மிக அருமை.

  ReplyDelete
 3. அட! திருநீர்மலை சமீபத்தில் சென்று வந்தேன் அனு. அப்போது கேமரா கொண்டு செல்லவில்லை. படங்கள் அழகு! அப்பாவிற்கு நன்றி சொல்லிவிடுங்கள்! ஒரே நாளில் 7 வாகங்கள்....7 நாள் திருவிழாவை ஒரே நாளில் கொண்டாடிவிடுகிறார்களோ??!!

  கீதா

  ReplyDelete
 4. படங்களுடன் பதிவை ரசித்தேன்.

  ReplyDelete