திருச்சியில் பிரசித்த பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேம் நேற்று ( 6.2.2௦17) நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் 600 ஆண்டுகள் பழமையானது. 2016 ம் ஆண்டு ஜுலை மாதம் மாரியம்மன் மூலஸ்தானம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அருமையான அத்தகைய நிகழ்வின் சில படங்கள்...
சமயபுரம் மாரியம்மன் - தங்க கவசத்தில் !
ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க - வாரும் அம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்கு
உன்னை அன்றி வேறு கதி - ஏதம்மா
(ஈஸ்வரியே மகமாயி)
சமயபுரம் சன்னதியின் வாசலிலே - லோக
சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய் - நாங்க
கொண்டாட வந்ததற்குப் பலன் கொடுப்பாய்
(ஈஸ்வரியே மகமாயி)
வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய் - சிங்க
வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் - இந்த
உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்
(ஈஸ்வரியே மகமாயி)
படவேட்டு எல்லையிலே குடி இருப்பாய் - நல்ல
பத்தினிகள் மஞ்சளுக்குத் துணை இருப்பாய்
மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே - அதை
குங்கமமாய் தரவேணும் நெத்தியிலே
(ஈஸ்வரியே மகமாயி)
அன்புடன்
அனுபிரேம்
இந்தக் கோவில் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. புகைப்படங்களை ரசித்தேன்.
ReplyDeleteசமயபுர மாரியம்மன் குடமுழுக்கு விழா தரிசனம் செய்தேன் நன்றி.
ReplyDeleteஆஹா செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த கோயில் பற்றிய படங்கள்!!! அருமை சகோ/அனு.
ReplyDeleteமிக்க நன்றி
ஆஹா என் முதல் வரவே மாரி அம்மன் தரிசனத்தோடு ஆரம்பமாவது பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. கோயில் திருவிளாக்கள் என்றாலே ஒரு அதீத இன்பம்தான்.
ReplyDeleteஅழகிய படங்களுக்கும் பாடலுக்கும் வாழ்த்துக்கள் அனு.
Wonderful coverage of the temple. I missed this in my trip.
ReplyDeleteபடங்கள் அழகு,
ReplyDeleteகும்பாபிஷேகத்துக்கு வந்த நிறைவு.
அம்மனின் பாடலையும் பகிர்ந்தமைக்கு நன்றி.