அப்பாவின் பார்வையில்...
( அப்பா சென்று சேவித்து ..அனுப்பிய படங்கள் )
சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் 11 பெருமாள்கள் எழுந்தருளும் தங்க கருட சேவை உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 29) நடைப்பெற்றது....
108 வைணவ தலங்களில், திருநாங்கூர் மற்றும் அதைச் சுற்றி 11 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன.
இக்கோயில்களில் ஆண்டுதோறும் கருட சேவை உத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான கருட சேவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.1.2௦17) அன்று நடைபெற்றது... அன்று இரவு 12 மணியளவில்
1. திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபால க்ருஷ்ணன்
2. திரு அரிமேய விண்ணகரம், ஸ்ரீகுடமாடுகூத்தர் (ஸ்ரீசதுர்புஜ கோபாலன்)
3. திருவண்புருடோத்தமம், ஸ்ரீபுருஷோத்தம பெருமாள்
4. திருச்செம்பொன்செய் கோயில், ஸ்ரீசெம்பொன்னரங்கர்.
5. திருமணிமாடக் கோயில், ஸ்ரீநாராயண பெருமாள்.
6. திருவைகுந்த விண்ணகரம், ஸ்ரீவைகுந்தநாதன்.
7. திருத்தேவனார்த் தொகை, ஸ்ரீமாதவ பெருமாள்.
8. திருத்தெற்றியம்பலம், ஸ்ரீரங்கநாதர்.
9. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்.
10. திருவெள்ளக்குளம், ஸ்ரீநிவாஸ பெருமாள்.
11. திருப்பார்த்தன்பள்ளி, ஸ்ரீபார்த்தசாரதி
ஆகிய பெருமாள்கள் தங்களுடைய கோயில்களில் இருந்து மேள, தாளங்களுடன் புறப்பட்டு திருநாங்கூர் மணிமாட கோயில் முன்பு எழுந்தருள்வர்.
பின்னர், மணவாள மாமுனிகள் சகிதம் திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி வீதியுலாவும் நடைபெற்றது.
அன் நிகழ்வின் படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு...
மிக அதிக கூட்டம்...அதனால் அனைத்து பெருமாளையும் படம் எடுக்க இயலவில்லை என கூறி...அப்பா அவர் எடுத்ததிலே சிறப்பாக வந்த படங்களை தான் அனுப்பினார்...
நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே! கருமா முகில்போல்
எந்தாய்!, எமக்கே அருளா யெனநின்று
இமையோர் பரவும் இடம், எத் திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே
களிவண்டுமிழற்றநிழல்துதைந்து,
மந்தாரம் நின்று மணமல்குநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!
-திருமங்கையாழ்வார்
எட்டாந் திருமொழி (1218)
அன்புடன்
அனுபிரேம்

ஹம்ச வாகனத்தில் குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார்.
மணவாள மாமுனிகள்
மிக அதிக கூட்டம்...அதனால் அனைத்து பெருமாளையும் படம் எடுக்க இயலவில்லை என கூறி...அப்பா அவர் எடுத்ததிலே சிறப்பாக வந்த படங்களை தான் அனுப்பினார்...
நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய் !
நரநாரணனே! கருமா முகில்போல்
எந்தாய்!, எமக்கே அருளா யெனநின்று
இமையோர் பரவும் இடம், எத் திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாட மாடே
களிவண்டுமிழற்றநிழல்துதைந்து,
மந்தாரம் நின்று மணமல்குநாங்கூர்
மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே!
-திருமங்கையாழ்வார்
எட்டாந் திருமொழி (1218)
அன்புடன்
அனுபிரேம்
அருமையான தரிசனம்.
ReplyDeleteஇரண்டு மூன்று முறை கருடசேவைப் பார்த்து இருக்கிறேன்.
படங்கள் அருமை.
நன்றி அம்மா...
Deleteதிருநாங்கூர் கருட சேவை பற்றி கூகிள்ல தேடும் போது உங்கள் தளமும் வந்தது...அங்கு பார்த்து ரசித்தேன் அருமை அம்மா..
இந்த வருடமும் திருநாங்கூர் கருட சேவை பற்றி இனி பதிவு போடுவீர்கள் என உங்களை நினைத்தேன் நீங்களே வந்து வீட்டீர்கள்...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா...
காலையில் இனிய தரிசனம்.. மகிழ்ச்சி..
ReplyDeleteசு தர்ஷன். சேவித்துக் கொண்டோம்.
ReplyDeleteஅருமையான படங்கள் மற்றும் தர்சனம் ..பகிர்வுக்கு மிக்க நன்றி அனு..
ReplyDeleteகீதா
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.....
ReplyDelete