தொடர்ந்து வாசிப்பவர்கள்

03 February 2017

அய்யனார் கோவில், மேலூர், திருவரங்கம் ..(2)

முந்தைய பதிவில் அய்யனார் கோவில் படங்களை காவிரியோடு சேர்த்து  பார்த்தோம்....இன்று  ஸ்தல வரலாறு..
ஸ்தல வரலாறு...

      திருவரங்கத்திலிருந்து 3 km தூரத்தில் உள்ள மேலூர் கிராமத்தில் காவேரி ஆற்றிருக்கும் மலட்டாற்றுக்கும் (திருமஞ்சன காவேரி)  இடையே அடர்ந்த புதர்காடு அமைந்திருந்தது.  ஆள் அரவமற்ற  அந்த புதரில், காடைக் குருவி ஒன்று கீச் ... கீச்.....என்று தொடர்ந்து கூவியது..


        சட்டென்று பறந்து சென்று  அருகில் உள்ள மலட்டாற்றில் தன் உடலை நனைத்து இறக்கையை சிலிர்த்து கொண்டு புதருக்குள் பறந்தது. இதை தவிர வேறு எந்த செயலையும் அந்த  குருவி செய்யவில்லை.

         இதை கவனித்த மக்கள் ஒரு நாள் காடை சற்று தூரமாக பறக்கும் போது , புதருக்குள் புகுந்து, செடி கொடிகளை விலக்கி பார்த்தனர் ...அங்கு நெற்றியில் நாமத்துடன் கூடிய அய்யனார் சிலை  இருந்தது.

        சிறப்பம்சமாக அவர் பிடத்தின் அடியில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தார் . பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்து பசுஞ்சாணியால் மெழுகி ..அங்கு அய்யனாரை அமர்த்தி அழகு பார்த்தனர்...


        காடையால் அடையாளப் படுத்தப்பட்ட அய்யனாருக்கு காடைப் பிள்ளை அய்யனார் என பெயர் சூட்டினர். பின் கரையில் கோவில் கட்டி கரைமேல் அழகர் காடைப்பிள்ளை அய்யனார் என இவரை அழைத்து வருகின்றனர்...கோவிலில்  உள்ள  அழகு சிற்பங்கள்
தொடரும்...

ஸ்தல பெருமைகள்4 comments:

 1. திருமஞ்சன காவேரி பற்றிய சிறப்பை அறிந்தேன்... நன்றி...

  ReplyDelete
 2. அய்யனார் வரலாறு அறிந்து கொண்டேன்.
  ஓவியங்கள் அழகு.

  ReplyDelete
 3. அய்யனார் வரலாறு அறிந்தோம்...படங்கள் அழகு...

  ReplyDelete