முந்தைய பதிவில் அய்யனார் கோவில் படங்களை காவிரியோடு சேர்த்து பார்த்தோம்...
பின் ஸ்தல வரலாறு அறிந்தோம்.....
இன்று அய்யனார் ஸ்தல பெருமைகள்...
அய்யனாருக்கு நேர் எதிரே கருப்பண்ண சுவாமி மர குதிரையில் காட்சி அருள்கிறார். அய்யனாருக்கு அருகே விநாயகர், மணவாளமாமுனிகள், ஏகாம்பரநாதர் காமாட்சி அம்மன், பெரியண்ண சுவாமி, காத்த பரிமண சுவாமி, செய்வந்தியாண்டி கோனார், மதுரை வீரன், நவகிரகங்கள் போன்ற பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உண்டு.
அய்யனாருக்கு நேர் எதிரே கருப்பண்ண சுவாமி மர குதிரையில் காட்சி அருள்கிறார். அய்யனாருக்கு அருகே விநாயகர், மணவாளமாமுனிகள், ஏகாம்பரநாதர் காமாட்சி அம்மன், பெரியண்ண சுவாமி, காத்த பரிமண சுவாமி, செய்வந்தியாண்டி கோனார், மதுரை வீரன், நவகிரகங்கள் போன்ற பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உண்டு.
கரிகாலசோழன்
கல்லணை கட்டும் பணிகளை மேற்பார்வையிட தனது யானை, குதிரை பரிவாரங்களுடன்
சென்று கொண்டிருந்தார்...அப்பொழுது அய்யனார் கோவில் அருகே வரும் போது ...யானைகளும்,
குதிரைகளும், அந்த இடத்தை விட்டு அசையாமல் படுத்து கொண்டதாம்...
கரிகாலன் எவ்வாறு முயன்றும் அவை எழ மறுத்தன...
அப்பொழுது ஒரு இடையரின் மேல் சாமி வந்து தான்
அருகில் குடிக் கொண்டிருக்கும் ஐய்யனார் என்றும், தனக்கு யானை வாகனமும், பரிவார
மூர்த்திகளுக்கு குதிரை வாகனமும் பிரடிஷ்டை செய்யுமாறு அருள் வாக்கு சொன்னாராம். அதன்
படியே சில மாதங்களில்அய்யனாருக்கு வெள்ளை நிற
யானை வாகனமும், பெரியண்ணன் சுவாமிக்கு பச்சை நிற குதிரை வாகனமும், காத்த
பரிமண சுவாமிக்கு சிகப்பு நிற குதிரை வாகனமும்,மதுரை வீரனுக்கு சிகப்பு நிற
குதிரை வாகனமும், வடிவமைத்து பிரதிஷ்டை செய்து கொடுத்தாராம்...அதன் பிறகு கல்லணை
வேலையும் வெகு விரைவாக சிறப்பாக கட்டி முடித்ததாக செவி வழி செய்திகள் சொல்கின்றன.
Add caption |
என்றும் மனதிற்கு மிகவும் நெருக்கமான கோவில் எங்கள் அய்யனார் கோவில்..
அக்கோவிலை இங்கு அறிமுகபடுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி....
எங்களுடன் சேர்ந்து எங்கள் அய்யனாரை தரிசித்த அனைவருக்கும்
மிகவும் நன்றி...
அன்புடன்,
அனுபிரேம்.
அய்யானார் கோவில் படங்கள், வரலாறு அருமை.
ReplyDeleteஅய்யனார் சாமி எப்பவுமே கம்பீர சாமி. படங்கள் அழகு. குறிப்பாக கடைசி படம்.
ReplyDeleteஅய்யனாரின் குதிரை வாகனங்கள் மிக அழகு. எனக்கும் அய்யனார் கோயில்கள் பிடிக்கும்... படங்களிலேயே பார்த்திருக்கிறேன், எப்பவும் அய்யனார் கொயில் அமைந்திருக்கும் சூழல் மிக அழகாக இருக்கும்., நேரில் போனதில்லை.. இலங்கையில் அய்யனார் கோயில் இருப்பதாக தெரியவில்லை.
ReplyDeleteஅனு புண்ணியத்தில், நானும் அய்யனாரைத் தரிசித்தேன்ன்.. எனக்கும் பலன் உண்டுதானே?:).
ReplyDeleteகண்டிப்பா...பலன் உண்டு..
Deleteஅருமை
ReplyDeleteபடங்கள்அழகு
நன்றி சகோதரியாரே
படங்கள் அனைத்தும் அழகு! சகோ/அனு. அதுவும் ஐயனார் சாமி என்றாலே ஒரு தைரியமிக்க கம்பீரமான தோற்றம் தான் நினைவுக்கு வரும். எங்களுக்கு விடாது கருப்பு சீரியல் நினைவும் வந்தது..
ReplyDeleteபடங்கள் அழகு அதிலும் கடைசிப் படம் மாடுகள் குளிப்பது என்று நினைக்கிறோம் மிக அழகு!!