05 June 2020

பதினோராம் நாள் - தேரோட்டம்

மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..

மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..

நான்காம் நாள் தங்க பல்லாக்கு...

ஐந்தாம் நாள் -வேடர்பறிலீலை, தங்கக்  குதிரை வாகன உலா

ஆறாம் நாள் ரிஷப வாகனத்தில்...

 ஏழாம் நாள் இறைவன் அதிகார நந்தி மீதும், அம்மன் யாளி வாகனத்திலும் ...

எட்டாம் நாள்  இரவு - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

ஒன்பதாம் நாள் விழா -  மீனாட்சி அம்மன் திக்விஜயம் - இந்திர விமான உலா



பதினோராம் நாள், அதிகாலை 4.30 மணியில் இருந்து 5 மணிக்குள் சுவாமி, பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சின்னத் தேரிலும் மேஷ லக்னத்தில் எழுந்தருளுவர்.


மேள, தாளங்கள் முழங்க தேர் மாசி வீதிகளை சுற்றி வரும். 

தேரில் சுவாமி பவனி வரும்போது சம்ஹார கோலத்தில் வருவார். 
அப்போது, சுவாமிக்கு கிரீடம் அணிவிக்கப்பட மாட்டாது.
மதியம் 3 மணிக்கு சுவாமிக்கு கிரீடம் அணிவிக்கப்படும். 

இன்று இரவு மட்டும் தான் ஒரே சப்த வர்ண சப்பரத்தில் சுவாமி, பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் மூவரும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர். 





















சப்த வர்ண சப்பரம்











திருவிழாத் தத்துவமும் பலனும்  

பதினோறாம்  நாள் நடைபெறும் திருத்தேர் திருவிழா இறைவனின் சங்காரம்
 ( மறைத்தல்,அருளல்) குறித்து நடைபெறுவதாகும். மேலும் ஆன்மாக்களுக்கு உயர்வு நல்கி  வருவதையும் குறிப்பதாகும். 

தேரின் அமைப்பு பிண்டத்திற்குச் சமானம். விசுவ விராட் சொரூபமே எட்டு அடுக்குகளாகும். 

உச்சியிலிருக்கும் கும்பம் சோடசாந்தம், 
அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம், 
அதற்கடுத்தது மஸ்தக ஆதி ஸ்தானம், 
அதற்கடுத்தது மஸ்தக மத்திய ஸ்தானம், 
அதற்கடுத்தது மஸ்தக அந்தஸ்தானம், 
அதற்கடுத்தது புருவ மத்தியஸ்தானம், 

நடுவில் தாங்கும் குத்துக் கால்கள் தத்துவக் கால்கள்,
 முன் மூன்று துறைகள் கண்கள், பின்னவை சிகையும் இடவலக் காதுகளுமாகும். 


இறைவன் எழுந்தருளியிருக்கும் கேடய பீடம் முப்பாழ், 
குதிரைகள் சூரிய சந்திர கலைகள், 
சாரதி அக்னிகலை, இவை நாசியாகும். 

அடுத்த அடுக்கு கண்டஸ்தானம், 

அதையடுத்த அடுக்கு இருதய ஸ்தானம், 

அதையடுத்த அடுக்கு நாபி, 

அதற்கடுத்த அடுக்கு குண்டலிஸ்தானம், 

பத்துச் சக்கரங்களும் தச வாயுக்கள்.

 இறைவன் இதற்குக் கர்த்தா தான் ஒருவனே என்றுணர்த்தி இவ்வாறமைந்த பிண்ட தத்துவ சரீரமாகிய இரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, 
அசைவற்ற மனத்தை உந்தி, 
குண்டலியிலிருந்து நாபிக்கும், 
அதிலிருந்து கண்டத்திற்கும், 
அதிலிருந்து வாய்க்கும் ஏற்றி லயப்படுத்தி,

 முறையே இரதக் குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண் வழியாகவும், நடுவழியாகவும், மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவ மத்திக்கும் ஏற்றி லயப்பட்டு, சும்மா இருந்தபடி இருக்கும் நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தைக் காட்டுகிறது. 

மேலும் தேர் திரிபுராதிகளைச் சிவன் எரித்தது ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கும் அறிகுறியாகிறது.


தேவாரப் பதிகங்கள் - 
3.052.திருஆலவாய் - திருவிராகம்


வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்
கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.


வீடுபேற்றிலன்றி வேறொன்றில் விருப்பம் இல்லாதவராய் மெய்ஞ்ஞானிகள் உம் திருவடிகளைப் போற்றிப்பாட , 
அவர்தம் வாக்கினிடமாக விளங்குபவரே ! அவர்கள் துதித்துப் போற்றுகின்ற பண்புகள் பலவற்றை உடையவரே ! சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தை விரும்பி நில்லாதவரே ! கபாலி என்னும் பெயரையுடையவராய் , மதில் சூழப்பெற்ற நான்மாடக்கூடல் என்னும் திருஆலவாயில் எழுந்தருளியுள்ள பெருமானாரே ! நீர் மதுரையம் பதியில் குலாவி விளையாடுவது எம்மால் அறியும் தரத்த தன்றா யுள்ளது .


மதுரை சித்திரைத்   திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

8 comments:

  1. படங்கள் அனைத்துமே அழகு.

    சித்திரைத் திருவிழாவை நேரில் பார்த்த உணர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார் ...

      Delete
  2. படங்களும் தகவல்களும் விவரணங்களும் அருமை. ரசித்தேன்

    துளசிதரன்

    படங்கள் அனைத்தும் அழகு அனு.

    எப்படி இந்த வருடம் திருவிழா என்று நினைத்துக் கீழே பார்த்த போது தெரிந்தது முந்தைய வருடப் படங்கள் என்று.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா ...

      ஆமா கீதா அக்கா எல்லாமே முந்தைய வருட படங்களே ...

      Delete
  3. படங்களும் தகவல்களும் அருமை!

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    படங்கள், அதிலும் தேர் படங்கள் மிகவும் அழகாக உள்ளது. தேருடன் அன்னை மீனாட்சி சொக்கநாதரை தரிசித்து கொண்டேன். தேரின் விவரணை முழுதும் படித்தறிந்து கொண்டேன். அதை படிக்கும் போது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது. நல்ல தெய்வீகமான பகிர்வை தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா அக்கா ...

      Delete