வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள் ...
1.குடகு மலை காற்றில்
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்
1.குடகு மலை காற்றில்
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்
துபாரே பார்த்துவிட்டு எங்கள் பயணத்தை பெங்களூரு நோக்கி தொடர்ந்த போது , மதியம் 3 மணிக்கு மைசூரு வந்தோம் .. இன்னும் நேரம் இருந்ததால் மைசூருவில் ஏதேனும் பார்க்கலாம் என்ற எண்ணம் வந்தது ...
அப்பொழுது இங்கு செல்லலாம் என அனைவரும் முடிவு செய்து இந்த ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு வந்தோம் ...
பலமுறை மைசூரு பார்த்து இருந்தாலும் இதுவரை ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் நாங்கள் சென்றது இல்லை ... அதனால் ஆர்வத்துடனே இங்கு வந்தோம் ....
ரங்கனதிட்டு ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், மைசூருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இது கர்நாடகாவின் பக்ஷி காஷி என்றும் அழைக்கப்படுகிறது.
கர்நாடகாவின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் இது .
40 ஏக்கர் (16 ஹெக்டேர்) பரப்பளவில், காவேரி ஆற்றின் கரையில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது .
இந்த சரணாலயம் ஆறு சின்னஞ்சிறு தீவுகளால் ஆனது.
காவிரியில் அணை கட்டும் போது உருவான இந்தத் தீவுகள் பறவைகள் வந்தமரும் அருமையான வாசஸ்தலமாக அமைந்து இருந்தது .
இதை பார்த்த உலகப்புகழ் பெற்ற பறவையியல் நிபுணர் டாக்டர்.சலீம் அலி 1940 –இல், அன்றைய மைசூர் மகாராஜாவிடம் இதைப் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அவரின் விருப்பப்படி இந்த சரணாலயம் உருவாக்கப்பட்டு , பாதுகாக்கப்படுகிறது .
ரங்கனதிட்டு - அழகான சூழல். தொடரட்டும் படகுப் பயணம்.
ReplyDeleteநன்றி வெங்கட் சார் ..
Deleteரங்கனதிட்டு, ஸ்ரீரங்கப்பட்டினம் எல்லாம் போயிருக்கிறேன் 30 வருடங்களுக்கு முன்!!! அதுக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை இப்ப இங்கேயே இருந்தாலும். அதுவும் இப்ப சூழல்ல எங்கும் பயணிக்க முடியாத நிலை.
ReplyDeleteபடங்கள் அழகு. பறவைகள் படம் வரும்னு நினைக்கிறேன். படகுப் பயணம் அறிய ஆவல்
கீதா
நன்றி கீதா அக்கா ...
Deleteஅனு இப்ப ரங்கனதிட்டு நல்லா டெவலப் ஆகியிருக்கு போல.
ReplyDeleteகீதா
ஆமா அக்கா நல்ல பராமரிப்பு ..
Deleteரங்கனதிட்டு பயணம் - ஶ்ரீரங்கபட்டினம் சென்றிருக்கிறேன். ரங்கனதிட்டு சென்றதில்லை. ஆமாம்... பறவையின் படம் ஒன்றுகூடக் காணலையே. வருமா?
ReplyDeleteஅடுத்த பதிவில் வரும் சார் ...ஆன என்னோடது மொபைல் கிளிக்ஸ் தான் அதனால அவ்வளோ துல்லியமா இல்ல ..
Deleteஅழகாக இருக்கிறது. பயணம் தொடர்வோம்.
ReplyDeleteநமது நாட்டில் குமண பறவைகள் சரணாலயம் ஜீப்பில் சென்று பார்வையிடலாம் 35ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.வெளிநாட்டுப் பறவைகளும் வந்து செல்கின்றன. இங்கு மூலிகைதாவரங்களும் நிறைய இருக்கின்றன. மான்கள்,காட்டுப்பன்றிகளும்,முதலைகளும் உள்ளன.நீங்கள் அறிந்து கொள்வதற்காக தந்திருக்கிறேன்.
தகவலுக்கும் வருகைக்கும் நன்றி மா
Deleteபயணமும் கட்டுரையும் உபயோகமானது.. அருமை.
ReplyDeleteநன்றி அதிரா ...
Delete