வாழ்க வளமுடன்
பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்துடன் ...
இன்றைய வாசிப்பில் ஹமீதா அவர்களின் - 'நீ நதிபோலே ஓடிக்கொண்டிரு!' ....
மீண்டும் ஒரு அருமையான கதை ..
இன்றைய விளையாட்டு உலகில் நடைபெறும் நிகழ்வுகள் கொண்டு....
அதே சமயம் வானத்து தூதராய் நாயகனை விழிக்காமல் இயல்பாய், இனிமையாய் ஒரு நாயகன்...
நாயகனின் குழந்தை பருவ நிகழ்வுகளை வாசிக்கும் போது, அனைத்தும் நிழல் படமாய் நம் கண் முன்னே விரிகிறது,
மேலும் அந்த கடின நாட்களை வாசிக்கும் போது ஏனோ நாமும் உடன் இருந்து பார்த்தது போல கண்ணிலிருந்து, தானே வழியும் நீரையும் நிறுத்த இயலவில்லை...
அத்தனை இயல்பாய் கதைக்களம்....
மேலும் அந்த கடின நாட்களை வாசிக்கும் போது ஏனோ நாமும் உடன் இருந்து பார்த்தது போல கண்ணிலிருந்து, தானே வழியும் நீரையும் நிறுத்த இயலவில்லை...
அத்தனை இயல்பாய் கதைக்களம்....
இது புனையப்பட்ட படைப்பாய் தெரியவில்லை...
ஒருவரின் வாழ்க்கையாகவே நமக்கு புரிகிறது, தெரிகிறது....
ஒருவரின் வாழ்க்கையாகவே நமக்கு புரிகிறது, தெரிகிறது....
அடுத்து என்னை கவர்ந்த விடயம் எத்தனை நல்லவர்கள்....
ஆம் , மனதில் வன்மம் கொண்டு யாரும், எங்கும், யாரையும் பழி தீர்க்க வில்லை...
ஆம் , மனதில் வன்மம் கொண்டு யாரும், எங்கும், யாரையும் பழி தீர்க்க வில்லை...
நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் ஒரு இயல்பாகவே நடக்கிறது ...
பலர் நல்லவர்களாய், பிறருக்காக வாழ்பவர்களாய் அதுவும் பொது ஜனமாய் நம்மில் ஒருவராய் இருக்கிறார்கள் ....அந்த காவல் துறை அதிகாரி, ஐயா, சிவகாமி அத்தை, வடிவு , திரு, கேபிரியல் சார், மேடம் ,...... ரோசா.......என.....
கிராமத்திலிருந்து ஒரு மாணவன் எந்த வித பின்புலமும் இல்லாமல் விளையாட்டு போட்டிக்கு வரும் போது , அவனின் நிலை என்ன என பல நிதர்சன நிகழ்வுகள் இக்கதையில் ..

படிக்க படிக்க அனைத்தும் காட்சிகளாக நம் முன்னே ...
இத்தகைய சிறப்பான நாவல் தந்த ஹமீதா அவர்களுக்கு நன்றிகள் பல....
இந்த நாவல் அமேசான் kindle லும் கிடைக்கிறது ... ..
வாய்ப்புக் கிடைக்கும் போது தவறாமல் வாசித்து பாருங்கள் ...
இந்த நாவலின் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கும் அன்பு வாசகி....
அன்புடன்
அனுபிரேம்
நல்லதொரு நூல் அறிமுகம். நன்றி. முடிந்தால் வாசிக்கிறேன்.
ReplyDeleteவிமர்சனமே வாசிக்கும் ஆவலை ஏற்படுத்துது.
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteமிக ஆழமான வாசிப்பனுபவப் பகிர்வுக்கு முதற்கண் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!
கதையும் கதைக்களமும் நாயகனின் இயல்பும் உங்களை மிகக் கவர்ந்தது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அனு. மற்றும் ஏனைய பிற பாத்திரங்களின் வடிவமைப்பும் உங்களைக் கவர்ந்திருப்பதை மிக இயல்பான வார்த்தைக் கோர்வைகளால் அழகுற இயம்பியுள்ளீர்கள். தன்னுடைய எழுத்து, தான் எழுதிய விதமே வாசகனால் உணரப்பட்டது என்பதை, அவ்வாசகன் தன்னுணர்வுகளை பாராட்டுதலாக வெளிப்படுத்தும் விதத்தில் உணர்ந்து கொள்ளும் தருணம், ஒரு எழுத்தாளருக்கு மிகுந்த நிறைவைக் கொடுக்கும் தருணமாகும். அவ்வகை நிறைவைக் கொடுத்த ஆழமான வாசிப்பனுபவப் பகிர்விற்கு மனமார்ந்த அன்பும் நன்றிகளும் மா!
அன்புடன்
ஹமீதா