வாழ்க வளமுடன்
1
முந்தைய பதிவுகள் ...
1.குடகு மலை காற்றில்
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்
14.யானை யானை ...
போன பதிவில் துபாரே பற்றிய அறிமுகம் பார்த்தோம் ....இன்று யானைகளின் அழகிய காட்சிகள் ...
பத்து மணியிலிருந்து யானைகள் இங்கு குளிக்க வருகின்றன.
இங்கே உள்ளே சென்று யானைகளை அருகில் காண தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும் ...
2
முதலில் வந்த குட்டி யானை ... இதன் பாகன் ரொம்ப கறார் பேர்வழி ... இவரிடம் தனியாக பணம் தந்தால் தான் யானை அருகிலையே அனுமதிக்கிறார் ...
3
4
5
முதலில் நாங்களும் அமைதியாக வேடிக்கை பார்த்தோம் .. பின் பசங்க மட்டும் அருகில் செல்லட்டும் என்று எண்ணி நான் கரையிலையே அமர , உடன் வந்த சிநேகிதி வாங்க இது ஜாலியா இருக்கும் என்று அழைக்க ...பெரியவன் நான் வரல நீங்க போங்க அம்மா ன்னு அனுப்பி வைத்தார் ...
அடடா குழந்தையாய் மாறிய தருணம் ....அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு ...
6
யானை வரும் வழித்தடம் ...இந்த வழியாக அடுத்து அடுத்து என 5, 6 யானைகள் வந்தன ...
7
8
9
10
நான் அருகில் சென்று தொட்டு பார்த்த யானை ..... பயமா இருந்தாலும் மெதுவா தொட்டு , தடவி பார்த்தேன் ...
அதன் தோல் அத்தனை கரடு முரடு ...நாங்கள் தொடுவது கூட அதற்கு உணராது ...ஆனாலும் அது அத்தனை பதுசா குழந்தை போல படுத்து இருந்தது ... வித்தியாசமான துள்ளலான அனுபவம் ...
14
15
16
17
கீழே அருகே பார்த்து ரசித்த பிறகு , மேலே ஏறி வந்தோம் ...அங்கிருந்தும் யானைகளை ரசிக்கலாம் ..அப்பொழுது பாகன் சொல் கேட்டு, அனைவரின் மேலும் நீரை பாய்ச்சி விளையாட்டு காண்பித்தது இந்த வளர்ந்த குழந்தைகள் ... .... பலரின் காமெரா , போன் எல்லாம் நனைய ...ஊ , ஆ என பல பல சத்தங்கள்
18
19
20
21
22
முழுதாக இரண்டு மணி நேரம் பொறுமையாக இங்கு மகிழ்ந்து இருந்தோம் ...அடுத்து என்ன செய்தோம் அடுத்த பதிவில் ..
தொடரும் ....
அன்புடன்,
அனுபிரேம்
அன்புடன்,
அனுபிரேம்
உவகையுடன் ரசித்தேன். மகிழ்ந்தேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார் ..
Deleteயானை நம்மை சிறு குழந்தை ஆக்கும்.
ReplyDeleteஅனைத்து படங்களும் மிக அழகு.
நன்றி மா ...
Deleteஆஹா மகிழ்வான தருணங்களாக இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கையோடு இயைந்திருப்பதில் எத்தனை ஆனந்தம்.
ReplyDeleteஆமா, மிக மகிழ்வான நேரம் வெங்கட் சார் ...
Deleteயானைகளை அதன் படங்களை எவ்வளவு முறை வேணுமானாலும் பார்க்கலாம்.
ReplyDeleteதந்தம் சாலிட் என்று சின்ன வயசுல நினைத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் உள்ளூடாக ஓட்டை இருக்கும் என்று தெரிந்தது.
யானையைப் பார்க்கும்போது பொதுவா நமக்கு பயம் இருக்காது. மரியாதையும் நண்பனைப்போல மகிழ்ச்சியும் இருக்கும். இல்லையா?
ஆமா, சார் ...
Deleteஅது என்னமோ ஒவ்வொரு முறை யானையை காணும் போதும் முதல் முறை காணும் மகிழ்ச்சி வரும் ...
மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். படங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteநன்றி ....
Deleteமனதுக்கு இனிய காட்சிகள்.
ReplyDeleteநன்றி மா ..
Deleteமனதைக் கொள்ளை கொண்ட படங்கள்...
ReplyDeleteநானும் யானையைத் தொட்டுத் தடவியிருக்கிறேன்..
நாம் தொடுவதை யானை உணர்கிறதோ.. இல்லையோ... நமது அன்பையும் மகிழ்ச்சியையும் அவை புரிந்து கொள்வதாகத் தோன்றுகிறது...
வாழ்க நலம்...
ஆமாம் அவைகள் வளர்ந்த குழந்தைகள் போல மகிழ்வை தரும் அண்ணா ...
Deleteமிக அழகான படங்கள்
ReplyDeleteதுளசிதரன்
செமையா இருக்கு அனு. யானைகளைப் பார்ப்பதே சந்தோஷம் தான். நீங்களும் பசங்களும் எஞ்சாய் செய்திருப்பாங்கன்னு தெரியுது. குட்டிப்பாப்பா போல படுத்திருக்கு பாருங்க ஹையோ செமையா இருக்கு கொஞ்சனும் போல இருக்கு.
கீதா
உங்களின் மகிழ்வான கருத்துக்கு நன்றி துளசி அண்ணா , கீதா அக்கா
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. யானைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அதன் ஒவ்வொரு அசைவும், நமக்கு மகிழ்ச்சுயையே தரும். குளிப்பது அதற்கும் மகிழ்ச்சியை தந்திருப்பதால், நம்மைச் சுற்றி இத்தனை பேர்களா என கண்டுக்காமல் இருந்ததோ என்னவோ? ஆனாலும் தைரியமாக மக்கள் அதன் அருகில் நிற்பது படமெடுப்பது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. ரசனையான அனுபவம்தான். படங்கள் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்களின் மகிழ்வான கருத்துக்கு நன்றி கமலா அக்கா ..
Delete