27 June 2020

நான்காம் நாள் - எதிர் சேவை



நான்காம் நாள் -எதிர் சேவை 

அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அழகர் , வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். 

அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். 

இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது.


















 மறுநாள் விடியற் காலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து ( சித்ரா பௌர்ணமியன்று ) அழகர் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகையை நோக்கி செல்வார் .

 புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுதூரிலிருந்து சூடிக் கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார் . 








திருவாய்மொழி
மூன்றாம் பத்து
ஒன்றாம் திருவாய்மொழி – முடிச்சோதி
திருமாலிருஞ்சோலை அழகரது எழிலை அநுபவித்தல்


2901
வருந்தாதஅருந்தவத்த மலர்க்கதிரின்சுடருடம்பாய் * 
வருந்தாதஞானமாய் வரம்பின்றிமுழுதியன்றாய்! * 
வருங்காலம்நிகழ்காலம் கழிகாலமாய் * உலகை 
ஒருங்காகஅளிப்பாய்! சீர் எங்குஉலக்கஓதுவனே?


2902
ஓதுவாரோத்தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும் * 
சாதுவாய்நின்புகழின் தகையல்லால்பிறிதில்லை * 
போதுவாழ்புனந்துழாய் முடியினாய்! * பூவின்மேல் 
மாதுவாழ்மார்ப்பினாய்! என்சொல்லியான்வாழ்த்துவனே?


மதுரை சித்திரைத்  திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. படங்கள் அழகு. தகவல்கள் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  2. புகைப்படங்களும் அலங்காரங்களும் அருமை.

    ReplyDelete
  3. படங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன அனு!

    கீதா

    ReplyDelete
  4. அழகிய படங்கள். கள்ளழகர் அழகோவியம்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. அழகரை தரிசித்துக் கொண்டேன். அழகர் வைகை ஆற்றில் இறங்கும் தகவல்களை மிகச் சிறப்பாக தொகுத்து பகிர்ந்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete