படம்: குஷி
பாடல்: மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
இசை : தேவா
பாடியவர் : ஹரிணி
பாடல்வரிகள் : வைரமுத்து
மேகம் கருக்குது...
மின்னல் சிரிக்குது...
சாரல் அடிக்குது...
இதயம் பறக்குது...
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே
மேகம் கருக்குது...
மின்னல் சிரிக்குது...
சாரல் அடிக்குது...
இதயம் பறக்குது...
நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துள்ளி போடு!
என் மார்பே உன் வீடு!
மேகம் கருக்குது...
மின்னல் சிரிக்குது...
நிலவே வா... வா... வா...
நில்லாமல் வா... வா... வா...
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கரையை சலவை செய்து விடவா
புறாவே வா... வா... வா...
பூவோடு வா... வா... வா...
உன்னோட குளிருக்கு இடம் தரவா
என் கூந்தலில் கூடு செய்து தரவா
காற்றை போல் எனக்கு கூட
சிறகொன்றும் கிடையாது
தரைமேலே செல்லும் போது
சிறை செய்ய முடியாது
இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்துக்கொள்வேன்
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்
நான் சொல்லும் வேளையில்
மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே
என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு
ஓ... ஓ... ஓ...
கனாவே வா... வா... வா...
கண்ணோடு வா... வா... வா...
விண்வெளியை அளந்திட சிறகு கொடு
விண்மீனில் எனக்கு படுக்கை போடு
மைனாவே வா... வா... வா...
மையோடு வா... வா... வா...
என் கண்கள் அழகின் ஒளிபரப்பு
என் அழகை பறந்து பறந்து பரப்பு
பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால் தான் ரெண்டாம் நிலவாய்
நான் வந்தேன் இப்போது
பூக்களில் தேங்கும் பனிதுளி அள்ளி
காலையில் குளித்துக்கொள்வேன்
விடிகிறபோது விடிகிறபோது
வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன் ஹோய்
நான் சொல்லும் வேளையில்
மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே
என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு
மேகம் கருக்குது...
மின்னல் சிரிக்குது...
சாரல் அடிக்குது...
இதயம் பறக்குது..
..............
போன வாரம் எடுத்த மழை மேகத்தின் காணொளியும் , படங்களும் ...
அன்புடன்
அனுபிரேம்
nice.
ReplyDeleteபடங்கள் அழகாக இருக்கின்றன. நானும் மே மாத இறுதியிலிருந்து அவ்வப்போது வானில் மேகங்கள் காட்டும் நர்தனத்தை படம் பிடித்திருக்கிறேன். நேற்று நள்ளிரவில்கூட நிறைய மேகங்கள் நகர்வு.
ReplyDeleteஅதிசயமாக சூர்ய கிரகணத்தின்போது மேகங்கள் இல்லை
இனிமையான பாடல். எனக்கும் பிடித்த பாடல்.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteபாடல் அருமை.
வா.வ் சூப்பரா இருக்கு படங்கள். எனக்கும் க்றுத்த மேகங்கள் குவியலாக வரும்போது பார்க்க விருப்பம். பொருத்தமான நல்ல பாட்டு.
ReplyDeleteபுகைப்பட மேகப்படலங்களும் அதற்கீடான பாடல் வரிகளின் தேர்வும் அருமை.
ReplyDelete