13 June 2020

ஸ்ரீ கள்ளழகர் சித்திரை திருவிழா ...


மதுரை சித்திரை திருவிழாவின் பதிவுகளை இதுவரைக்   கண்டோம் ...இனி  அழகரின் இனிய விழா காட்சிகள்...


 அழகர்  சித்திரை திருவிழா மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும்,  அழகர் மதுரைக்குப் புறப்படும் முன்பே  அவருக்குத் திருவிழாக்கள் தொடங்கி விடும் ....

முதல் இருநாட்கள் கோவிலின் உள்ளே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சேவை சாதிப்பார் ...


முதல் நாள் சேவையில் ...






மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. 


தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான்.  அவன் தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது,  'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக,   இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.


எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். 


இரண்டாம் நாள்  விழா ....







திருவாய்மொழி
மூன்றாம் பத்து
ஒன்றாம் திருவாய்மொழி – முடிச்சோதி
திருமாலிருஞ்சோலை அழகரது எழிலை அநுபவித்தல்



2897
முடிச்சோதியாய் உனதுமுகச்சோதிமலந்ததுவோ? * 
அடிச்சோதிநீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? * 
படிச்சோதியாடையொடும் பல்கலனாய் * நின்பைம்பொன் 
கடிச்சோதிகலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே. (2) 
1



2898

கட்டுரைக்கில்தாமரை நின்கண்பாதம்கையொவ்வா * 
சுட்டுரைத்தநன்பொன் உன்திருமேனியொளி யொவ்வாது * 
ஒட்டுரைத்து இவ்வுலகுஉன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் * 
பட்டுரையாய்ப்புற்கென்றே காட்டுமால்பரஞ்சோதீ!  
- 2




மதுரை சித்திரைத்  திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்



4 comments:

  1. மதுரையில் வசித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete
  2. மதுரையும் கள்ளழகர் திருவிழாவும் - எப்போது நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமோ... காத்திருக்கிறேன்.

    படங்கள் அழகு. தகவல்களும் சிறப்பு. தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தொடர் கருத்துரைகளுக்கு நன்றி வெங்கட் சார் ...

      Delete