12 August 2017

அறப்பளீஸ்வரர் திருக்கோவில், கொல்லிமலை



சங்ககாலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும்,
 ’அறமலை’ என்றும் அழைக்கப்பட்டது.

நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் 'சதுரகிரி' என்ற பெயர் ..

சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

அறை = சிறிய மலை. 
மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி.
 இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று....















அறப்பளீஸ்வரர் கோவில்

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது.



ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா இங்கு விசேஷம்... அப்பொழுது எடுத்த படங்கள் இவை...






விழா நிகழ்வின் போது  இறைவனின்  அருகே திரிசூலத்தை வைத்து வணங்கி....கீழே ஓடும் ஆற்றுக்கு எடுத்து சென்று.....பூஜை செய்கின்றனர்....













ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.



அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது.


அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார்.

பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தமது தேவாரப் பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.


ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா இங்கு பெரும்விசேஷம்... 


இன்றும் பழமை மாறாமல் நடைபெறும் ஒரு அழகிய திருவிழா.....





அன்புடன்
அனுபிரேம்...




   

8 comments:

  1. அழகிய படங்களுடன் விபரங்கள நன்று

    ReplyDelete
  2. அழகான படங்கள், அருமையான விவரங்கள்.

    ReplyDelete
  3. அறம்வளர்த்தநாயகி, அறப்பள்ளீச்சரர் போன்ற பெயர்களை முற்றாக சமக்கிருதத்துக்கு மாற்றாமல் இவ்வளவுகாலமும் விட்டு விட்டார்களே, இது அவ்வளவு வருமானம் இல்லாத கோயில் போலிருக்கிறது.

    ReplyDelete
  4. கோயில் திருவிழாவினை நேரில் கண்டதைப் போலிருந்தது.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  5. அழகியப் படங்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. அழகான படங்கள்! விவரங்களும் நன்று!!

    ReplyDelete
  7. அழகான படங்கள் மற்றும் தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete