14 August 2016

பாரதியின் வரிகள்..

அனைவருக்கும் வணக்கம்....

எங்கு நோக்கினும்  மூவர்ண்ண கொடி விளம்பரங்கள்....அனைத்து  நாளிதலிழும் சுதந்திர தின சிறப்பு சலுகைக்கான அழைப்புகள்...

ஆனால் இன்றைய நாளை நாம் எப்படி பார்ப்பது......என்ற குழப்பமான நிலை...விடுமுறை நாள் என்று மட்டுமே இது வரை எண்ணி இருந்தது போய்....வேறு பல நல்ல சிந்தனைகளை வித்திடும் நாளாக இன்று அமைய வேண்டும் என்ற எண்ணத்துடனே இன்றைய பதிவு...






தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! -நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!





சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே! -அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!





வடக்கில் இமயமலை பாப்பா! -தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!







வேத முடையதிந்த நாடு, -நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி  பாப்பா!


 
வாழ்க நம் தேசம்...

வளர்க அதன் புகழ்..  சுதந்திர தின வாழ்த்துக்கள்




அன்புடன்

அனுபிரேம்....

3 comments:

  1. சுதந்திர தினப் பகிர்வு அருமை. நல்ல சிந்தனைகளை வளர்ப்போம்......

    ReplyDelete
  2. படித்துக் கொண்டு வரும்போதே பெண் குரலில் இந்தப் பாடல் மனதில் ஒலிக்கிறது. யார் பாடியது, வாணி ஜெயராமா ன்று நினைவில் இல்லை. நல்ல பதிவு.

    ReplyDelete
  3. நல்ல பதிவு நல்ல சிந்தனைகளுடன்!!

    ReplyDelete