வாழ்க வளமுடன்
ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆதி பிரம்மோற்சவம் 13//08/20 அதிகாலை துவஜாரோஹனத்துடன் (கொடியேற்றம்) தொடங்கியது. பொது முடக்கத்தால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லாத காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலான பட்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கைங்கர்யபரர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.
ஆதிப்ரமோத்ஸவத்தில் நம்பெருமாளின் மிக அருமையான சேவையை இனி காணலாம் ..
முதல் நாள் - கொடியேற்றம்
முதல் நாள் மாலை
ஶ்ரீநம்பெருமாள் உப நாச்சியார்களுடன் திருவிசிகையில் கருட மண்டபத்தில் எழுந்தருளினார்.
நம்பெருமாள் ஆதிப்ரமோத்சவம் யாகசாலை திருமஞ்சனம் முதல் நாள்
ஆதிப்ரமோத்ஸவம் இரண்டாம் நாள் மாலை
மாலை ஶ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு கருட மண்டபம் சேர்ந்து, பின்னர் அலங்கரிக்கப்பட்ட திருவிசிகையில் கருட மண்டபத்தில் எழுந்தருளி இரவு திருமஞ்சனம் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார்.
![]() |
நம்பெருமாள் மூன்றாம் நாள் மாலை -
ஶ்ரீநம்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட திருவிசிகையில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு கருட மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.
நம்பெருமாள் சேவை நான்காம் நாள்
ஶ்ரீநம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட திருவிசிகையில் புறப்பட்டு கருட மண்டபத்தை அடைந்தார். பின்பு அங்கு கருட சேவையில் அனைவருக்கும் சேவை சாதித்தார்.
![]() |
திருவாய்மொழி - ஏழாம் பத்து
இரண்டாம் திருவாய்மொழி – கங்குலும்பகலும்
3348
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ணநீர் கைகளாள் இறைக்கும் *
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக் கண் என்றே தளரும் *
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்
இருநிலம் கைதுழா இருக்கும் *
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயே? (2)
3349
என் செய்கின்றாய்? என்தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர்மல்க இருக்கும் *
என் செய்கேன்? எறிநீர்த் திருவரங்கத்தாய்
என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும் *
முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ? என்னும் *
முஞ்செய்து இவ்வுலகம் உண்டுமிழந்தளந்தாய்
என் கொலோ முடிகின்றது இவட்கே?
ஆதிப்ரமோத்ஸவம் படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
அரங்கன் திருவடிகள் போற்றி.. போற்றி..
ReplyDeleteநம்பெருமான் திருவடிகளே சரணம் சரணம் ...
Deleteபுதிய வடிவமைப்பு அழகாக இருக்கிறது...
ReplyDeleteநலம் வாழ்க..
மிகவும் நன்றி அண்ணா ...
Deleteஆதிப்ரம்மோத்ஸவம் படங்கள் மிக அழகு. பகிர்வுக்கு நன்றி. நீங்கள் பதிவு போட்ட நேரம், எல்லாக் கோவில்களும் பக்தர்களுக்குத் திறந்துவிடப்பட்டன என்ற செய்தியைப் பார்க்க நேர்ந்தது. பக்தர்கள் கட்டுப்பாட்டுடன் இதனை உபயோகிக்கவேணும்.
ReplyDeleteகங்குலும் பகலும் பாசுரம், கோவில் திருவாய்மொழியில் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தது.
எறிநீர்த் திருவரங்கத்தாய் - அலைகள் நீர் எறிகின்ற காவிரி சூழ்ந்த அரங்கத்தில் துயில்பவனே.
தங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி சார் ..
Deleteஆமாம் கோவில்களை திறந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தாலும், மக்கள் பொறுமையாக கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் ...
ஆதிப்ர்ம்மோத்ஸ்வம் கண்டு களித்தேன்.
ReplyDeleteபடங்கள் அழகு.
பாசுரம் படித்தேன்.
நன்றி மா
Deleteபடங்கள் வழி நாங்களும் ஆதி பிரஹ்மோத்ஸவம் கண்டு மகிழ்ந்தோம்! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteநலமே விளையட்டும்.