17 September 2020

பஞ்சதுவாரகா தரிசனம் ...

 வாழ்க வளமுடன் 

துவாரகை - துவாரகா குஜராத் மாநிலத்தின் தேவபூமி. 





கண்ணன் பிறந்தது மதுரா சிறைச்சாலையில் தான்,  என்றாலும் அவர் ஆட்சி புரிந்தது என்னவோ துவாரகையில் தான்.


கிருஷ்ணர் தனது தாய் மாமன் கம்சனை மதுராவில் அழித்தபோது, அதைக் கேள்விப்பட்ட  கம்ஸனுடைய மாமனாரான ஜராசந்தனுக்குப் பெருங்கோபத்தை உண்டாக்கியது. 


அதனால் கண்ணன் வடமதுரையை ஆட்சி செய்த காலத்தில், ஜராசந்தன் 18 முறை படையெடுத்தான். ஒவ்வொரு முறையும் இவன் தனது படைகளை இழந்தான். மேலும் 17 மற்றும் 18வது யுத்தத்துக்கு இடையில், காலயவனன் எனும் தீயவன், யாதவர்களும் தன்னைப் போன்று பலம் உடையவர்கள் எனும் சேதியை நாரதர் மூலம் அறிந்து, மூன்று கோடி வீரர்களுடன் படையெடுத்து வந்தான்.

யாதவ சேனை ஆரம்பத்தில் ஜராசந்தனது படைகளை எதிர்த்தன. என்றாலும், அடுத்தடுத்த போர்களில் பலம்குன்றி எண்ணிக்கையும் குறைந்து போயின.

இனி ஜராசந்தனை எதிர்க்க இயலாது என்று கருதிய கிருஷ்ணன், மிச்சமிருந்த யாதவர்களை அழைத்துக்கொண்டு மேற்கு கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கே கடலரசனிடம் 12 யோஜனை நிலத்தைப் பெற்றார். இதனால் கடல், நிலப்பரப்பை விட்டு 12 யோஜனை தூரம் உள்வாங்கிச் சென்றது. இப்படி கடல் விட்டுக் கொடுத்த நிலத்தில் தேவதச்சனான விஸ்வகர்மா மூலமாக ஓர் அழகான நகரை கிருஷ்ணன் நிர்மாணித்தார். அதுதான் துவாரகை.

   


பிற்காலத்தில் ரிஷிகளின் சாபம் காரணமாக யாதவ குலமே அழிய நேர்ந்தது. 

 துவாரகா நகரின் பெரும் பகுதியும் கடலின் எழுச்சியால் மூழ்கியது. தற்போது இருக்கும் புனிதத் தலமான  ஆதிதுவாரகையின் வாயிலாக ஐந்து திருத்தலங்கள் விளங்குகின்றன. 


அந்தத் திருத்தலங்கள்  ‘பஞ்சதுவாரகா’ என்று அழைக்கப்படுகிறது.


முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகையும்  ஒன்று. 

வைணவத் திருத்தலங்கல்-108 ல் ஒன்றாது இந்த திருத்துவாரகை. 

கோமதி ஆற்றின் கரையில் துவாரகை நகரம் அமைந்துள்ளது.


      கடந்த பிப்ரவரி மாதம்  அப்பா , அம்மாவிற்கு  மீண்டும் ஒரு முறை துவாரகா பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது ...  அந்த பயணக்  குறிப்புகளை ஒரு சேமிப்பாக  இருக்கும் என்ற அளவிலும் இன்னும் பல தகவல்களை அறிந்துக் கொள்ளும் ஆவலிலும்  இங்கு பதிவிடுகிறேன் ....



படங்கள் அதிகம் இல்லை, இயன்ற அளவு   தகவல்களுடன்  சிறு பதிவுகளாக பஞ்ச துவாரகா தரிசனம் காணலாம் ... .. 


2452

சேயனணியன் சிறியன்மிகப்பெரியன் * 

ஆயன் துவரைக்கோனாய்நின்ற - மாயன் *அன்று 

ஓதிய வாக்கதனைக்கல்லார் * உலகத்தில் 

ஏதிலராம் மெய்ஞ்ஞானமில். 


நான்முகன் திருவந்தாதி  - 71


தொடரும் 

அன்புடன் 

அனுபிரேம்     

9 comments:

  1. வணக்கம் சகோதரி

    பஞ்ச துவாரகா செய்திகள் அருமை. மறு முறையாக பஞ்ச துவாரகா சென்று தரிசித்து வந்த தங்கள் அப்பா
    அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள். படங்கள் நன்றாக உள்ளன. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா அக்கா ..

      Delete
  2. நானும் சமீபத்தில்தான் பஞ்சத்வாரகா தரிசனம் செய்தேன். இன்னும் எழுதிவைக்கவில்லை, ஆனால் நிறைய படங்கள் எடுத்தேன்.

    விரிவாக எழுதுவீங்கன்னு நினைக்கிறேன். அவங்க படங்கள் வருமா?

    ReplyDelete
    Replies
    1. ஓ மிக மகிழ்ச்சி சார் ..

      அப்பா மிக குறைவாகவே படம் எடுத்துள்ளார் ..இங்கு 15 நாள் பயணமாக சென்று வந்தனர்..இருக்கும் படங்கள் கொண்டு முடிந்த அளவு எழுத முயல்கிறேன் ..ஆனாலும் விரிவாக வருமா என தெரியவில்லை ..அவர்களின் படமும் வரும் ..

      உங்களின் பயண குறிப்புகளை பகிர்ந்தால் இன்னும் உபயோகமாக இருக்கும் ...விரைவில் வரும் என ஆவலுடன் காத்திருக்கிறேன் ..

      Delete
  3. பஞ்சத்துவாரகா படங்களுடன் பதிவு அருமை.பக்தி தொலைக்காட்சியில்
    கிருஷ்ண ஜெயந்திக்கு நேரடி ஒளிபரப்பு பார்த்து இருக்கிறேன். அபிசேகம் அலங்காரம் படங்களும் எடுத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  4. பஞ்ச துவாரகா அருமையான இடங்கள். இரண்டு முறை பயணித்து இருக்கிறேன். எனது பக்கத்தில் கட்டுரைகளும் உண்டு. மின்புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறேன். உங்கள் கட்டுரையும் படிக்க ஆவல்.

    ReplyDelete
  5. எப்படி travel பண்ணனும்னு ஏதாவது suggest பண்ண முடியுமா? நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அப்பா , அம்மா அவங்க யாத்திரை குழுவுடன் தான் இந்த பயணம் செய்தார்கள் ..முதல் முறை ரொம்ப பரிச்சியம் இல்லாத இது போன்ற இடங்களுக்கு குழுவுடன் சென்றால் தான் நலமாக இருக்கும்..அப்பொழுது தான் எந்த இடத்தையும் விடாமல் தரிசிக்கலாம் ...

      ஆகவே உங்களுக்கு ஏற்ற குழுவை தெரிந்தவர்கள் மூலம் கண்டுப்பிடித்து ..அவர்கள் மூலம் செல்லுவது மிக எளிது ...

      தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி ...

      உங்களுக்கும் இது போன்ற மிக சிறப்பான தரிசனங்கள் விரைவில் கிடைக்க எனது வாழ்த்துக்களும் ...

      Delete
  6. மிக்க நன்றி

    ReplyDelete