14 September 2020

மாடு மேய்க்கும் கண்ணே...

வாழ்க வளமுடன் ...




மாடு மேய்க்கும் கண்ணே ..மகனின் ஓவியமும் மருமகளின் குரலிலும் ..


 யசோதை:

மாடு மேய்க்கும் கண்ணே நீ ...

போக வேண்டாம் சொன்னேன்


கண்ணன்:

போக வேணும் தாயே ..

தடை சொல்லாதே நீயே


சரணம்:


காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்

கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)


காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்

உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

----


யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்

கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)


கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?

கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

------




கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு

கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)


காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்

கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

------



பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்

என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)


பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்

தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)


இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர் 


பெரிய திருமொழி - பதினோராம் பத்து 

ஐந்தாம் திருமொழி – மானமரும் - 3

1994

ஆழ்கடல்சூழ்வையகத்தார் ஏசப்போய் * ஆய்ப்பாடித் 

தாழ்குழலார்வைத்த தயிருண்டான்காணேடீ! * 

தாழ்குழலார்வைத்த தயிருண்டபொன்வயிறு *இவ் 

வேழுலகுமுண்டும் இடமுடைத்தால்சாழலே! 



அன்புடன் 

அனுபிரேம் 

5 comments:

  1. சித்திரமும் பாடலும் அருமை... அருமை...

    ReplyDelete
  2. மகனின் ஓவியம் அழகு.மருமகளின் பாடல் இனிமை.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    தங்கள் மகன் வரைந்த கண்ணன் ஓவியமும் மருமகளின் பாடலும் மிக அழகாகவும், அருமையாகவும் இருக்கிறது. இருவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. செல்லங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete