வாழ்க வளமுடன் ,
டாப்ஸ்லிப் , இந்த இடத்தின் உண்மை பெயர் வேட்டைக்காரன் புதூர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கோ, இரைச்சல் போடும் இசைக் கருவிகளுக்கோ, போதைப் பொருட்களுக்கோ அனுமதி இல்லை.
ஆனைமலையில் உள்ள கரிசன்சோழா என்னும் பகுதியை மூலிகை மருத்துவமனை என்றே செல்ல பெயரிட்டு அழைக்கின்றனர். அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.
டாப் ஸ்லிப்பின் நுழைவுப் பகுதியிலேயே மிக விசாலமான புல் வெளியைக் காணலாம்.
முந்தைய பதிவுகள்
2.ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சி
3.அருள்மிகு ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவில்
4.டாப் ஸ்லிப் ஆனைமலை புலிகள் காப்பகம்
நாங்கள் டாப்ஸ்லிப் அடையும் போது மதியம் 1 மணி....
இங்கு டாப்ஸ்லிபில் தமிழக அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அறைகளை இரவு தங்குவதற்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்...
அப்படி முன் பதிவு செய்து இருந்தால் தான், மாலை 4 மணிக்கு மேல் இங்கு இருக்க முடியும் இல்லை என்றால், 4 மணிக்கு முன் அனைவரும் வனத்தை விட்டு கீழிறங்க வேண்டும்..
இங்கு அறைகளும் நமது விருப்பத்திற்கு ஏற்ப- தனியாக தங்க...குடும்பத்துடன் தங்க ...குழுவாக தங்க என உள்ளன...எங்கள் பயணம் சில நாட்களுக்கு முன்னர் திட்டமிட்டதால் தனி அறைகள் கிடைக்க வில்லை...
குழுவாக தங்கும் அறைகளே கிடைத்தன... ஒரு அறையில் 16 பேர் தங்கலாம்...
நாங்கள் 8 பேர் பெரியவர்களும்..6 சிறுவர்கள் எனவும் சென்றதால்...இதுவும் நன்றாகவே இருக்கும் என இந்த அறையே முன்பதிவு செய்தோம்...
அதற்கான வாடகையும் மிக குறைவே...முன்பதிவு செய்யும் போது இத்தனை குறைவான வாடகை என்றால் அறை எப்படி இருக்கும் என பல பல யோசனைகள்..
(இணையத்தின் வழியே எளிதாக இங்கு பதிவு செய்துக் கொள்ளலாம் .)
நாங்கள் அங்கு சென்றதும் நேராக வனதுறையின் அலுவலர் அலுவலகத்துக்கு சென்று எங்கள் அறைக்கான சாவியை பெற்றுக் கொண்டு...அங்கு சென்றோம்...
எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாகவே அவ்வறைகள் இருந்தன.
எங்களின் அறையில் பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு மீண்டும் அங்கு சென்று விசாரிக்க அன்றைக்கான சவாரிகள் அனைத்தும் முடிந்து விட்டது எனவும் ...வேண்டும் என்றால் பரப்பிக்குளம் சென்று பார்க்கவும் என அங்கிருந்த அலுவலர் கூறினார்.
![]() |
எங்களின் அறை |
டாப் ஸ்லிப்பில் இருந்து சிறிது தூரம் சென்றால் கேரள எல்லை. கேரள எல்லைப் பகுதிக்குள் போகும் அந்த சாலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றால் பரம்பிக்குளம் வரும்...
டாப்சிலிப்பில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது பரம்பிக்குளம்.
நாங்களும் நிதானமாக அங்கு சென்றும் ....அங்கு என்ன பார்த்த்தோம் அடுத்த பதிவில் ...
தொடரும் .....
டாப் சிலிப் சென்றதில்லை. இப்பயண அனுபவம் இனி திட்டமிடுவோருக்கும், செல்வோருக்கும் உதவியாக இருக்கும்.
ReplyDeleteடாப் ஸ்லிப், பரம்பிக்குளம் என எல்லாமே அருமையான இடங்கள். குடும்பத்துடன் சென்று வரும் எண்ணமுண்டு. பார்க்கலாம்!
ReplyDeleteபயண விவரங்கள் அங்கு செல்வோர்க்குப் பேருதவியாக இருக்கும்..
ReplyDeleteநலம் வாழ்க..