13 April 2020

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்

நட்புக்கள் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

மன்னார்குடி அருள் மிகு ஸ்ரீ வித்யா இராஜகோபால  சுவாமி தரிசனம் ..


















பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்


கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்


சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி *
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த *
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும் *
பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்துகாணீரே. (2)

1 23



முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும் *
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் * எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள் *
ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்துகாணீரே.

2 24


பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை *
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை *
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும் *
கணைக்கால் இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.

3 25


உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண *
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின் *
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான் *
முழந்தாள்இருந்தவாகாணீரே முகிழ்முலையீர்! வந்துகாணீரே.

4 26



பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு *
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை *
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான் *
குறங்குகளைவந்து காணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.

5 27









நாட்டில் நிலவும் கடினமான நேரத்தை கடந்து ,

அனைவரும் எல்லா நலமும், வளமும்,

பெற்று


மகிழ்வுடன் வாழ...


இறைவன் துணை இருக்கட்டும்



அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    புத்தொளி பிறக்கட்டும்...
    புவி எங்கும் வாழட்டும்....

    ReplyDelete
  2. மன்னார்குடி செல்லாமல் இங்கிருந்தே தரிசனம். நன்றி.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. படங்கள் அனைத்தும் அழகு.

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. புத்தாண்டு வாழ்த்துகள் மேடம்

    ReplyDelete
  6. இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete