06 April 2020

திருவாலி திருநகரி - திருமங்கை ஆழ்வார் வேடுபறி உற்சவம்

பங்குனி உத்திரம் நாள் கல்யாண விரத நாள் எனப்படுகிறது ...

இன்று தான்  ஆண்டாள்-ரங்க மன்னார், சீதா-இராமர் ஆகியோர் திருக்கல்யாணங்கள்   நடைபெற்றது.

எனவே , அன்று அனேகமாக எல்லா பெருமாள் கோவில்களிலும், திருக்கல்யாணம் அல்லது சேர்த்தி சேவை நடைபெறுகின்றது.





ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் சோழ மண்டலத்தில் உள்ள திருவாலி- திருநகரி திவ்ய தேசத்தில் நடைபெறும் திருக்கல்யாணம் மிகவும் தனித்தனமை பெற்றது,

இங்கு பெருமாள் கள்வனாக இருக்கும் தன்னுடைய கலியனை ஆட்கொள்ள,

திருமந்திர உபதேசம் கொடுக்க இங்கு மணக்கோலம் கொள்கின்றார்.

 இவ்விழா திருவாலி-திருநகரியில் 10 நாள் உற்சவமாக வேடுபறி உற்சவம்,  ஆயிரம் தீவட்டிக்கள் ஒளிர நடைபெறுகின்றது.









 வேதராஜபுரம் அருகே புது மணமக்கள் வரும் போது,  தன் தூதுவர் மூலம் செய்தியறிந்த மங்கை மன்னன் வாள் வலியால் எம்பெருமானை மிரட்ட,

மணமகனும் பயந்தது போல் , தனது மற்றும் புது மனைவியின் நகைகளையெல்லாம் கழற்றிக் கொடுக்க,

 அவர் அதை ஒரு மூட்டையாக கட்டி கீழே வைத்து விட்டு நிமிரும் போது மணமகனின் காலில் உள்ள மெட்டி கண்ணில் பட்டது,

அதையும் கழற்றிக் கொடு என்று கூற  மணமகனுக்கு  கழற்ற முடியவில்லை ....

நீயே கழற்றிக் கொள் என்று அவர் கூற, கையினால் கழற்ற முடியாமல்,

 தனது பல்லினால் கழற்ற முயன்றார்....என்வே மணமகனான பெருமான் இவரை கலியன் என்று பெயரிட்டார்.


பின் நகைகள் கட்டிய மூட்டையை தூக்க முயன்ற போது அவரால் அதை அசைக்கக் கூட முடியவில்லை.

 கோபம் கொண்ட அவர் ஏய்! என்ன மந்திரம் போட்டாய் ? என்று வாளை வீசி கேக்க ,

எம்பெருமானும் குனிந்து அவர் காதில், நாம் எல்லாம் உய்ய அஷ்டாக்ஷர மந்திரத்தை அவருக்கு அருள அதை மடியொடுக்கி, மனமடக்கி வாய் புதைத்து ஏற்றார் கலியன் .

மன்னராக இருந்து ஆழ்வாராக மாறினார்.

இந்த மந்திர உபதேச நிகழ்ச்சி ஆயிரம் தீவட்டி வெளிச்சத்தில் நடைபெறுவது மிகவும் சிறப்பு .

 திருமந்திர உபதேசம் பெற்றவுடன் வைணவர்கள் அனைவரும் வாடினேன் வாடி வருந்தினேன் என்ற பாசுரம் தொடங்கி ஆழ்வாரின் அனைத்து பாசுரங்களையும் பாடிக்கொண்டே வருகின்றனர், திருநகரி வந்தடையும் போது அதிகாலையாகிவிடும்.

இது வேடுபறி உற்சவம்.


மற்ற திருத்தலங்களில் பெருமாள் குதிரை வாகனத்தில் சேவை சாதிக்கும் போது, வேடுபறி உற்சவம் நடைபெறும் இங்கோ.... ஆழ்வார் குதிரை வாகனத்திலே வருகின்றார்.


















பங்குனி உற்சவ திருவிழா 10 நாள் திருவிழாவாக நடைபெறுகின்றது. இத்திருவிழாவின் 9ம்நாள் இரவு வேடுபறி உற்சவம்.

பகலில் திருவாலியில் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது.

இரவு வேடுபறி உற்சவம். மறுநாள் காலையில் பங்குனி உத்திரத்தன்று, பெருமாளும் ஆழ்வாரும் தனித்தனித் தேரில் சேவை சாதித்தருளுகின்றனர்.

 பின் தீர்த்தவாரி கண்டருளுகின்றனர்.

.






2063

நெஞ்சுருகிக்கண்பனிப்பநிற்கும்சோரும் 
நெடிதுயிர்க்கும்உண்டறியாள்உறக்கம்பேணாள் * 
நஞ்சரவில்துயிலமர்ந்தநம்பீ! என்னும் 
வம்பார்பூம்வயலாலிமைந்தா! என்னும் * 
அஞ்சிறையபுட்கொடியேஆடும்பாடும் 
அணியரங்கமாடுதுமோ? தோழீ! என்னும் * 
எஞ்சிறகின்கீழடங்காப்பெண்ணைப்பெற்றேன் 
இருநிலத்துஓர்பழிபடைத்தேன் ஏ! பாவமே.

திருநெடுந்தாண்டகம்  - 12


ஓம் நமோ நாராயணாய நமக 



அன்புடன்
அனுபிரேம்



2 comments:

  1. அழகான படங்கள். சிறப்பாக பதிவிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. படங்களும் விவரணங்களும் நல்லாருக்கு அனு.

    கீதா

    ReplyDelete