ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - மார்ச் 2023
முந்தைய பதிவு - ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம்
திருக்குறுங்குடி ஸ்ரீ வைஷ்ணவ நம்பி திருக்கல்யாண பிரம்மோற்சவம், 5ம் நாள் இரவு - பஞ்ச கருட சேவை.
நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, கிடந்த நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பாடு ...
முதல் மூன்று பெருமாள்களும் ஒரே திருக்கோவிலை சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் அருகில் உள்ள திருக்கோயில்களை சேர்ந்தவர்கள் ( முறையே 8 கி.மீ மற்றும் 1 கி.மீ )
5ம் நாள் இரவு - பஞ்ச கருட சேவை.....
பெரிய திருமொழி
9 -5. தவள இளம்பிறை
1790.
காலையும் மாலை ஒத்துண்டு* கங்குல்
நாழிகை ஊழியில் நீண்டு உலாவும்,*
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும்*
பொங்கு அழலே ஒக்கும், வாடை சொல்லில்*
மாலவன் மா மணி வண்ணன் மாயம்*
மற்றும் உள அவை வந்திடா முன்,*
கோல மயில் பயிலும் புறவின்*
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
1791
கரு மணி பூண்டு, வெண் நாகு அணைந்து*
கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும்,*
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள*
ஓர் இரவும் உறங்காதிருப்பேன்,*
பெரு மணி வானவர் உச்சி வைத்த*
பேர் அருளாளன் பெருமை பேசி,*
குரு மணி நீர் கொழிக்கும் புறவின்*
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
படங்கள் அனைத்தும் அழகு. அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.
ReplyDelete