வாழ்க வளமுடன்
ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - மார்ச் 2023
முந்தைய பதிவுகள் ---
1. ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம்
ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - 6ம் நாள் - மாலை தண்டியல் சேவை
ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - 8 ம் நாள் காலை பல்லாக்கு புறப்பாடு
ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ரும்மோத்ஸவம் - 10ம் நாள் - காலை - திருத்தேர்
பெரிய திருமொழி
9 -5. தவள இளம்பிறை
1792
திண் திமில் ஏற்றின் மணியும்* ஆயன்
தீங் குழல் ஒசையும், தென்றலோடு,*
கொண்டது ஓர் மாலையும், அந்தி ஈன்ற*
கோல இளம் பிறையோடு கூடி,*
பண்டைய அல்ல இவை நமக்கு*
பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,*
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு*
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
1793
எல்லியும் நன் பகலும் இருந்தே*
ஏசிலும் ஏசுக; ஏந்திழையார்,*
நல்லர்; அவர் திறம் நாம் அறியோம்,*
நாண்,மடம், அச்சம், நமக்கு இங்கு இல்லை*
வல்லன சொல்லி மகிழ்வரேலும்*
மா மணி வண்ணரை நாம் மறவோம்,*
கொல்லை வளர் இள முல்லை புல்கு*
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.
No comments:
Post a Comment