18 March 2023

39. அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே !

39. அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே !




 தசரத சக்கரவர்த்தி கம்பீரமாக அயோத்தியை ஆண்டு வந்தான். அவனுடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. அரண்மனைக்கு வந்தால் அரண்மனை அழகு கூடுமாம். தேவலோகத்தில் இருப்பவர்களும் தசரதனின் புகழையும் வியந்தார்கள். எல்லாம்  இருந்தது ஆனால் குழந்தை மட்டும் இல்லை!

தசரதன் தன் குல குரு வசிஷ்டரிடம் வருத்தப்பட்டார். 

வசிஷ்டர் “புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் குழந்தைகள் பிறக்கும்” என்றார். உடனே அந்த யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான் தசரதன். வசிஷ்டர் முன்னின்று அந்த யாகத்தை நடத்தி வைத்தார். 

யாகம் முடிந்த பின் நான்கு மகன்கள் பிறந்தார்கள். அவர்களுக்கு ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் என்று பெயர் வைத்தவரும் வசிஷ்ட முனிவர் தான்.

“ராமர் என்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியவன், 

லக்ஷ்மணன் என்றால் அடையாளத்தைக் குறிக்கும். 

பரதன் ராஜ்யத்தை ஆளப் போகிறவன், 

சத்ருக்னன் எதிரிகளை வெல்பவன்” ....


”லக்ஷ்மணனுக்கு எப்போதும் ராமனின் தொண்டன். அதுவே அவனுடைய அடையாளம் !” .


தசரதரின் ராஜ குமாரர்கள் இளமைப் பருவம் அடைந்தபோது....

ஒரு நாள், காயத்திரி மந்திரத்தைத் தந்த விஸ்வாமித்திர முனிவர் தசரதரின் அரண்மனைக்கு வந்தார். சபையிலிருந்த எல்லோரும் எழுந்து நின்று வரவேற்றார்கள்.

 தசரதருக்கு வியப்பும், ஆனந்தமும் கூடவே அதிர்ச்சியாகவும் இருந்தது. “என் தவம் செய்தேனோ! நீங்கள் இங்கே காலடி வைத்திருக்கிறீர்கள்” என்று வரவேற்றார். 

ஒரு ஆசனத்தில் முனிவரை அமர வைத்து அவரை வணங்கினான்.


விஸ்வாமித்திரர் நன்றாகப் பேசத் தெரிந்தவர். மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார். 

தசரதனைப் புகழ்ந்து பேசினார். 

உடனே தசரதர் “நீங்கள் இங்கே வந்த நோக்கம் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்றார். 

விஸ்வாமித்திரர் “நாங்கள் செய்யும் யாகங்களை அரக்கர்கள் இடையூறு செய்கிறார்கள். அதைக் காக்க உன் மகன் ராமனை என்னுடன் அனுப்பி வை” என்றார்.

 தசரதனுக்கு அதிர்ச்சியும் கலக்கமும் ஏற்பட்டது. 

என்ன செய்வது என்று தெரியவில்லை. “ராமன் சிறுவன். உங்களுடைய யாகத்தைக் காக்க நானே பெரிய படையுடன் வருகிறேன்” என்றான்.

ராமரை அனுப்பத் தசரதன் தயங்குகிறான் என்பதைப் புரிந்துகொண்ட விஸ்வாமித்திரருக்கு கடும் கோபம் வந்தது. முனிவரின் கோபத்தைப் பார்த்துத் தசரதனும், வசிஷ்டரும் நடுங்கினார்கள்.

அப்போது வசிஷ்டர் தசரதனைப் பார்த்து அறிவுரை கூறினார் “தசரதா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்! என்று கொடுத்த வாக்கை மீறலாமா ? இது தான் உன் பெருமைக்கு அழகில்லையே! இஷ்வாகு குல உம்முடைய குலம். உன் முன்னோர்கள் அரிச்சந்திரன், சிபி போன்றவர்கள். அவர்கள் கொடுத்த வாக்கை எப்படிக் காப்பாற்றினார்கள் என்று உனக்குத் தெரியும். நீ செய்யும் தானம், தர்மம், யாகம், தவங்கள் எல்லாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவை பலன் தராது. உன் மகன் ராமனை அனுப்பு. விஸ்வாமித்திரர் நிச்சயம் ராமனைப் பாதுகாப்பார். உன் மகன் ராமனின் நன்மைக்கே இதை எல்லாம் அவர் செய்கிறார்” என்றார்.

வசிஷ்டருடைய உபதேசத்தால் தசரதன் மனம் மாறினான். ராமனையும், கூட லக்ஷ்மணனையும் அனுப்பி வைத்தார். வசிஷ்டர் சொன்னபடி பல நன்மைகள் நடந்தது.

“அரக்கர்களை அழித்தார், அகல்யை சாபம் நீங்கியது. வில்லை முறித்தார், சீதையைத் திருமணம் செய்துகொண்டார்!”

"வசிஷ்டரை போல இறைவனுக்கான நலன் எது என்று தெரிந்து கொண்டு, முனிவரோடு அனுப்ப சொல்லி முறையிட்டேனா அவன் தந்தையிடம்? பிறகு எதற்கு இந்த ஊரில் இருக்கவேண்டும்?" என்று திருக்கோளூர் பெண்பிள்ளை கேட்டபடி கிளம்புகிறாள்.



முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே





திருவாய்மொழி -முதற் பத்து

1-7 பிறவித்துயர் அற 
ஆராதிப்பார்க்கு  மிக எளியவன் 


யான் ஒட்டி என்னுள்*  இருத்துவன் என்றிலன்,* 

தான் ஒட்டிவந்து*  என் தனி நெஞ்சை வஞ்சித்து,*

ஊன் ஒட்டி நின்று*  என் உயிரில் கலந்து,*  இயல் 

வான் ஒட்டுமோ?*  இனி என்னை நெகிழ்க்கவே.7

2971



என்னை நெகிழ்க்கிலும்*  என்னுடை நன் நெஞ்சம்- 

தன்னை,*  அகல்விக்கத் தானும்*  கில்லான் இனி,*

பின்னை நெடும் பணைத் தோள்*  மகிழ் பீடு உடை,* 

முன்னை அமரர்*  முழுமுதல் தானே.  8

2972








40. திருச்சித்ரக்கூடம்

ஸ்ரீ புண்டரீகவல்லீ ஸமேத ஸ்ரீ கோவிந்தராஜாய நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment