02 November 2022

27. "ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே"

27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே





ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, இலக்குன், சீதா தேவி ஆகியோர் தண்டாகாரண்யத்தை அடைந்தபோது அங்கு முனிவர்களின் ஆஸ்ரமத்தில் தங்கி அவர்களது வணக்கங்களை செலுத்தினர்.

அப்படியிருக்க அவர்கள் அகஸ்தியரின் ஆசிரமத்திற்கு ஒருமுறை வந்தனர்.

ராமர், சீதை, லக்ஷ்மணரும் அகஸ்தியர் இருக்கும் இடத்துக்கு மலைகளைக் கடந்து நடந்து சென்றார்கள். அங்கே ஒரு அழகிய வனத்தில் குள்ளமாக ஒரு முனிவரைப் பார்த்தார்கள். குள்ளமாக இருந்தாலும் தேஜஸ்வியாகக் காட்சியளித்தார்.

ராமர், சீதை, லக்ஷ்மணரும் அகஸ்தியரை வணங்கினார்கள். அகஸ்தியர் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்றார். 

பழங்களைக் கொடுத்து உபசரித்தார். சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள். 

அப்போது அகஸ்தியர் “ராமா நீ உலகங்களுக்கு எல்லாம் அரசன் உனக்குச் சில பரிசுகளைத் தருகிறேன்” என்று ஒரு வில்லை எடுத்து ”ராமா இந்த வில்லை எடுத்துக்கொள்” என்று கொடுத்தார்.

அந்த வில் ரத்தினங்கள் பதித்து பிரகாசமான இருந்தது. 

ராமர் அதை வாங்கிக்கொண்டார்.

 அகஸ்தியர் “ராமா இந்த வில் விஸ்வகர்மா என்பவர் மஹா விஷ்ணுவிற்காகச் செய்தது, பிரம்மாவினால் கொடுக்கப்பட்டது” என்றார். 

வில்லுடன் கூடவே அம்புகள் கொடுக்க வேண்டும் அல்லவா ? அகஸ்தியர் நிறைய அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணியைக் கொடுத்தார். 

ராமர் அதையும் வாங்கிக்கொண்டார். அகஸ்தியர் “இந்தக் கூர்மையான அம்புகள் அக்னி போல ஒளிவீசும். இவை இந்திரனால் கொடுக்கப்பட்டது. இந்த அம்பறாத்தூணியில் அம்புகள் எடுக்க எடுக்கக் குறையவே குறையாது!” என்றார். ராமர் அதை முதுகில் மாட்டிக்கொண்டார். 

அடுத்து அகஸ்தியர் தங்கத்தால் செய்யப்பட்ட ரத்தினங்கள் பதித்த கத்தி ஒன்றைக் கொடுத்தார். ”ராமா இந்த வில், அம்புகள் கத்தியைக் கொண்டு தான் மகாவிஷ்ணு அசுரர்களைக் கொன்று தேவர்களை முன்பு காப்பாற்றினார்” என்றார்.

இந்த ஆயுதங்களைப் பார்த்து ராமர் ”பதினான்கு வருடம் காட்டில் இருக்க வேண்டும். எனக்கு மீதம் இரண்டரை வருடம் பாக்கி இருக்கிறது எதற்கு எவ்வளவு ஆயுதம்?” என்று ராமர் யோசித்தார். 

முனிவர் “ராமா இது எதிரிகளைக் கொல்லுவதற்குப் பிற்காலட்தில் உனக்கு உதவும். என்றும் மங்கலம் உண்டாகுக” என்று வாழ்த்தினார். அகஸ்திய முனிவர் ஞானக் கண்ணால் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போகப் போகிறான். ராமர் வதம் செய்யப் போவதையும் அறிந்தார். அதனால் ராமருக்குத் தேவையாக ஆயுதங்களை அன்புடன் கொடுத்தார்.

ராமர் அகஸ்தியரைப் பார்த்து “தங்களுடைய தரிசனம் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன். உங்களைத் தரிசனம் செய்ததால் பரிசுத்தம் ஆனேன்” என்று அவரை வணங்கி விடைபெற்றார்.


“சாமி!, அகஸ்தியரைப் போல நான் ராமருக்கு எந்த உபகாரமும் செய்யவில்லையே!, அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.




முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே



திருவாய்மொழி -முதற் பத்து

1 - 5. வள ஏழ் உலகின்

எம்பெருமானின் சீலகுணம் 


மா யோனிகளாய் நடை கற்ற*  வானோர் பலரும் முனிவரும்* 

நீ யோனிகளைப் படை என்று*  நிறை நான்முகனைப் படைத்தவன்*

சேயோன் எல்லா அறிவுக்கும்;*  திசைகள் எல்லாம் திருவடியால் 

தாயோன்*  எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்*  தான் ஓர் உருவனே.  3

2945



தான் ஓர் உருவே தனி வித்து ஆய்*  தன்னில்  மூவர் முதலாய* 

வானோர் பலரும் முனிவரும்*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்*

தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி*  அதனுள் கண் வளரும்* 

வானோர் பெருமான் மா மாயன்*  வைகுந்தன் எம் பெருமானே. 4

2946







28. திருக்காழிச்சீராம விண்ணகரம்
ஸ்ரீ மட்டவிழுங்குழலி ஸமேத ஸ்ரீ தாடாள ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment