ஸ்ரீ பேயாழ்வார் அவதார திருநட்சித்திரம் இன்று ... ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...
பேயாழ்வார் வாழி திருநாமம்!
திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே
மறுக்கமழும் மயிலைநகர் வாழ வந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே
நெருங்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே
பிறந்த ஊர் - மயிலாப்பூர்
பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை - வியாழன்
எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் -100
சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
தொண்டை நாட்டில் மயூரபுரி எனும் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள புஷ்கரணியில் திருமாலின் *நாந்தகம் எனும் வாளின்* அம்சமாக அவதரித்தவர்.
திருக்கோவலூர் திருத்தலத்தில் இடைக்கழியில்
*வையம் தகளியா* என பொய்கையாழ்வாரும் ,
*அன்பே தகளியா* என பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற
திருமாலைக் கண்டு *திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்* எனத் தொடங்கி நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி பாடியவர்.
பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை - வியாழன்
எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் -100
சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
தொண்டை நாட்டில் மயூரபுரி எனும் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள புஷ்கரணியில் திருமாலின் *நாந்தகம் எனும் வாளின்* அம்சமாக அவதரித்தவர்.
திருக்கோவலூர் திருத்தலத்தில் இடைக்கழியில்
*வையம் தகளியா* என பொய்கையாழ்வாரும் ,
*அன்பே தகளியா* என பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற
திருமாலைக் கண்டு *திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்* எனத் தொடங்கி நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி பாடியவர்.
கைய கனல் ஆழி* கார்க் கடல் வாய் வெண் சங்கம்,*
வெய்ய கதை, சார்ங்கம் வெம் சுடர் வாள்,* செய்ய
படை பரவை பாழி* பனி நீர் உலகம்,*
அடிஅளந்த மாயன் அவற்கு 36
2317
அவற்கு அடிமைப் பட்டேன்* அகத்தான், புறத்தான்*
உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான்,* துவர்க்கும்
பவள வாய்ப் பூ மகளும்* பல் மணிப் பூண் ஆரம்,*
திகழும் திருமார்பன் தான். 37
2318
தானே தனக்கு உவமன்* தன் உருவே எவ் உருவும்,*
தானே தவ உருவும் தாரகையும்,* - தானே
எரி சுடரும் மால் வரையும்* எண் திசையும்,* அண்டத்து
இரு சுடரும் ஆய இறை. 38
2319
இறையாய், நிலன் ஆகி* எண் திசையும் தான் ஆய்*
மறையாய், மறைப் பொருளாய், வானாய்* - பிறைவாய்ந்த
வெள்ளத்து அருவி* விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான்,*
உள்ளத்தின்உள்ளே உளன். 39
2320
உளன் கண்டாய், நல் நெஞ்சே!* உத்தமன் என்றும்
உளன் கண்டாய்,* உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,*
விண் ஒடுங்கக் கோடு உயரும்* வீங்கு அருவி வேங்கடத்தான்,*
மண் ஒடுங்க தான் அளந்த மன். 40
2321
மன்னு மணி முடி நீண்டு* அண்டம் போய், எண் திசையும்,*
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே,* - மின்னை
உடையாகக் கொண்டு* அன்று உலகு அளந்தான்,* குன்றம்
குடையாக ஆ காத்த கோ. 41
2322
கோவலனாய்* ஆ நிரைகள் மேய்த்து, குழல் ஊதி,*
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன்,* மேவி
அரி உருவம் ஆகி* இரணியனது ஆகம்,*
தெரி உகிரால் கீண்டான் சினம். 42
2323
சின மா மத களிற்றின்* திண் மருப்பைச் சாய்த்து,*
புனம் மேய பூமி அதனைத்,* - தனமாக
பேர் அகலத்துள் ஒடுக்கும்* பேர் ஆர மார்வனார்,*
ஓர் அகலத்து உள்ளது உலகு. 43
2324
உலகமும்* ஊழியும், ஆழியும்,* ஒண் கேழ்
அலர் கதிரும்* செந் தீயும் ஆவான்,* பல கதிர்கள்
பாரித்த* பைம் பொன் முடியான் அடி இணைக்கே,*
பூரித்து,என் நெஞ்சே புரி. 44
2325
புரிந்து மத வேழம்* மாப் பிடியோடு, ஊடி*
திரிந்து, சினத்தால் பொருது,* - விரிந்தசீர்
வெண்கோட்டு முத்து உதிர்க்கும்* வேங்கடமே,* மேல் ஒரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை. 45
2326
முந்தைய பதிவுகள்
பேயாழ்வார் வைபவம்
திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....
பேயாழ்வார்
பேயாழ்வார்- 19
பேயாழ்வார் -2020
பேயாழ்வார் வைபவம்
திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....
பேயாழ்வார்
பேயாழ்வார்- 19
பேயாழ்வார் -2020
பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!
ஓம் நமோ நாராயணாய நமக ....
அன்புடன்
அனுபிரேம் 💚💚💚💚
வணக்கம் !
ReplyDeleteபேயாழ்வார் பற்றிப் பெரும்பணி செய்திட்டீர்
தாயாக நிற்பான் தரித்து !
வாழ்க நலம்