பேயாழ்வார் அவதார திருநட்சித்திரம் இன்று ...
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்... பேயாழ்வார் வாழி திருநாமம்!
திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே
மறுக்கமழும் மயிலைநகர் வாழ வந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே
நெருங்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே .....!
பிறந்த ஊர் - மயிலாப்பூர்
பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை - வியாழன்
எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் -100
சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
தொண்டை நாட்டில் மயூரபுரி எனும் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள புஷ்கரணியில் திருமாலின் *நாந்தகம் எனும் வாளின்* அம்சமாக அவதரித்தவர்.
திருக்கோவலூர் திருத்தலத்தில் இடைக்கழியில்
*வையம் தகளியா* என பொய்கையாழ்வாரும் ,
*அன்பே தகளியா* என பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற
திருமாலைக் கண்டு *திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்* எனத் தொடங்கி நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி பாடியவர்.
பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)
கிழமை - வியாழன்
எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் -100
சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)
தொண்டை நாட்டில் மயூரபுரி எனும் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள புஷ்கரணியில் திருமாலின் *நாந்தகம் எனும் வாளின்* அம்சமாக அவதரித்தவர்.
திருக்கோவலூர் திருத்தலத்தில் இடைக்கழியில்
*வையம் தகளியா* என பொய்கையாழ்வாரும் ,
*அன்பே தகளியா* என பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற
திருமாலைக் கண்டு *திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்* எனத் தொடங்கி நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி பாடியவர்.
2307
சிறந்த என் சிந்தையும் செங் கண் அரவும்,
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும், - உறைந்ததுவும்,
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,
தாம் கடவார் தண் துழாயார். 26
2308
ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார்,
காரே மலிந்த கருங் கடலை, நேரே
கடைந்தானைக் காரணனை, நீர் அணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து? 27
2309
அடைந்தது அரவு அணைமேல் ஐவர்க்கு ஆய், அன்று
மிடைந்தது பாரத வெம் போர், - உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான். 28
2310
பேய்ச்சி பால் உண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து,
ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த
இருள் ஆர் திருமேனி இன் பவளச் செவ்வாய்,
தெருளா மொழியானைச் சேர்ந்து. 29
2311
சேர்ந்த திருமால் கடல், குடந்தை, வேங்கடம்
நேர்ந்த என் சிந்தை, நிறை விசும்பு, - வாய்ந்த
மறை, பாடகம், அனந்தன் வண் துழாய்க் கண்ணி,
இறை பாடி ஆய இவை. 30
2312
இவை அவன் கோயில் இரணியனது ஆகம்,
அவை செய்து அரி உருவம் ஆனான், - செவி தெரியா
நாகத்தான் நால்வேதத்து உள்ளான், நறவு ஏற்றான்
பாகத்தான், பாற்கடல் உளான். 31
2313
பாற்கடலும், வேங்கடமும், பாம்பும், பனி, விசும்பும்,
நூல் கடலும், நுண் நூல தாமரை மேல், - பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,
குருந்து ஒசித்த கோபாலகன். 32
2314
பாலனாய் ஆலிலைமேல், பைய உலகு எல்லாம்
மேல் ஒரு நாள் உண்டவனே! மெய்ம்மையே, - மாலவனே
மந்திரத்தால் மா நீர்க் கடல் கடைந்து, வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று. 33
2315
அன்று இவ் உலகம் அளந்த அசைவே கொல்,
நின்று இருந்து வேளுக்கை, நீள் நகர்வாய், - அன்று
கிடந்தானைக் கேடில் சீரானை,முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே காண். 34
2316
காண் காண் என விரும்பும் கண்கள், கதிர் இலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி, - பாண் கண்
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான், செம் பொன்
கழல் பாடி யாம் தொழுதும் கை.
முந்தைய பதிவுகள் ..
பேயாழ்வார் வைபவம் போன வருட பதிவு
திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....
பேயாழ்வார்
பேயாழ்வார்- 19
பேயாழ்வார் -2020
அன்புடன்
அனுபிரேம்...
பேயாழ்வார் வைபவம் போன வருட பதிவு
திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....
பேயாழ்வார்
பேயாழ்வார்- 19
பேயாழ்வார் -2020
பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!
ஓம் நமோ நாராயணா..
அன்புடன்
அனுபிரேம்...
No comments:
Post a Comment