13 November 2021

மாமன்னர் இராஜராஜசோழரின் சதய விழா....

மாமன்னர் இராஜராஜ சோழரின் 1036வது சதய விழா.. 

இராஜராஜசோழரின் பிறந்த நாளான சதய திருவிழாவை முன்னிட்டு ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோயில்....




 

























016 கருவூர்த் தேவர் - தஞ்சை இராசராசேச்சரம்

பாடல் எண் : 1 பண் : பஞ்சமம்


உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி

    ஒன்றுநூ றாயிர கோடி

அலகெலாம் பொதிந்த திருவுடம் அச்சோ!

    அங்ஙனே அழகிதோ அரணம்

பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்

    பருவரை ஞாங்கர்வெண் டிங்கள்

இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை

    இராசரா சேச்சரத்(து)  இவர்க்கே



கோட்டை, பலவாக அழகு பொருந்திய பொருட் கூட்டத்தால் எடுப்பிக்கப்பட்ட நெடுநிலையாகிய எழுநிலை மாடங்கள் ஆகியவை, 

வெள்ளிய சந்திரன் பெரிய மலைப்பகுதியிலே தவழ்வதுபோல வெள்ளித்தகடுகள் 
 மதிலிலுள்ள மேடைகளில் பதிக்கப்பட்டுக் காட்சி வழங்கும் 
மதில்களால் சூழப்பட்ட தஞ்சை யிலுள்ள இராசராசேச்சரம் என்ற 
திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு, 
உலகங்களெல்லாம் தொழுமாறு வந்து தோன்றுகின்ற 
நூறாயிரகோடி பரிதிகளின் ஒளியினை உடைய சூரியன் உளதாயின் 
அதன் அளவாகிய ஒளியினை உடைய திருவுடம்பு வியக்கத்தக்கவகையில் 
பேரழகினதாக உள்ளது.



அன்புடன் 

அனுபிரேம் 

4 comments:

  1. வணக்கம் சகோதரி

    படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. சத்ய திருவிழா நன்றாக நடந்திருப்பதற்கு மகிழ்ச்சி. பாடலும்
    விளக்கமும் நன்று. இறைவன் இறைவியையும், சோழ சக்கரவர்த்தி இராஜராஜ சோழரின் திருவடிகளையும் வணங்கி கொள்கிறேன்.அனைத்தும் நலமாக நடக்க வேண்டும். பகிர்வுக்குமிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. அருமையான படங்கள், பதிவு

    ReplyDelete
  3. மிக அழகான படங்கள். அடாத மழையிலும் விடாமல் விழா எடுத்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. படங்கள் அனைத்தும் அழகு.

    ReplyDelete