12 November 2021

பூதத்தாழ்வார்

  பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று ....

ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...




பூதத்தாழ்வார் வாழி திருநாமம்!

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே

ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே

நன்புகழ் சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே

நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே

இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே

எழில்  ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே

பொன்புரையும்  திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே

பூதத்தார் தாளிணை இப் பூதலத்தில் வாழியே  !



பிறந்த ஊர் - மகாபலிபுரம்

பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்   - ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)

கிழமை   - புதன்

எழுதிய நூல் - இரண்டாம் திருவந்தாதி

பாடல்கள்  - 100

சிறப்பு     -  குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.


வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள்.

எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால், பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும், பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது. 

அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமை  செய்யப் பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்  பெரியவர்கள் வாக்கு. இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.





ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி


2207
வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய், - உந்திப்
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த,
படி அமரர் வாழும் பதி. 26



2208
பதி அமைந்து நாடி, பருத்து எழுந்த சிந்தை,
மதி உரிஞ்சி, வான் முகடு நோக்கி - கதி மிகுத்து அம் 
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே,
மால் தேடி ஓடும் மனம். 27


2209
மனத்து உள்ளான் வேங்கடத்தான், மா கடலான், மற்றும்
நினைப்பு, அரிய நீள் அரங்கத்து உள்ளான், - எனைப்  பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான், முன் ஒரு நாள்
மாவாய் பிளந்த மகன். 28


2210
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை,
அகன் ஆர உண்பன் என்று உண்டு, - மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய், தென் இலங்கை
நீர் ஆக எய்து  அழித்தாய் நீ. 29


2211
நீ அன்று உலகு அளந்தாய், நீண்ட திருமாலே,
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால், - நீ அன்று
கார்  ஓதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை,
பேர் ஓத மேனிப் பிரான். 30





2212
பிரான் என்றும் , நாளும் பெரும் புலரி என்றும்,
குரா நல் செழும் போது கொண்டு, - வராகத்து 
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்,
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து. 31


2213
மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி, - மகிழ்ந்தது 
அழல் ஆழி சங்கம்  அவை பாடி ஆடும்,
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து. 32


2214
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல், அங்கம்
அணிந்தவன் பேர்  உள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே,
வாய் திறங்கள் சொல்லும் வகை. 33


2215
வகையால்  அவனி  இரந்து அளந்தாய் பாதம்,
புகையால், நறு மலாரால் முன்னே, - மிக வாய்ந்த
அன்பு ஆக்கி ஏத்தி அடிமைப்பட்டேன்  உனக்கு,
என் பாக்கியத்தால் இனி. 34


2216
இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற,
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய், - இனிது என்று
காமம் நீர் வேளாது, நின் பெருமை வேட்பரேல்,
சேம நீர் ஆகும் சிறிது. 35










பூதத்தாழ்வார்  திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா..



அன்புடன்
அனுபிரேம்...






1 comment:

  1. வணக்கம் சகோதரி

    நலமா? பதிவு அருமையாக உள்ளது. பூதத்தாழ்வார் பற்றி தெரிந்து கொண்டேன். நன்கு தெளிவுடன் அருமையான பதிவாக்கி தந்துள்ளீர்கள். அவர் பாடிய திருவந்தாதி பாடல்களை பாடி அவரை வணங்கி மகிழ்ந்தேன். படங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete