19 October 2018

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வாரின் அவதார தினம்( 19.1௦.2018) இன்று..

ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...






பூதத்தாழ்வார் வாழி திருநாமம்!

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே

ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே

நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே

நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே

இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே

எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே

பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே

பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே  !





பிறந்த ஊர் - மகாபலிபுரம்

பிறந்த நாள் - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்   - ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)

கிழமை   - புதன்

எழுதிய நூல் - இரண்டாம் திருவந்தாதி

பாடல்கள்  - 100

சிறப்பு     -  குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.





(2182)
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.





(2183)
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,

தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்

தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்

பணியமரர் கோமான் பரிசு.






(2184)
பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,

புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்

தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து

நல்லமரர் கோமான் நகர்.





(2185)

நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே

திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்

பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,

அங்கம்வலம் கொண்டான் அடி.






(2186)
அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்

அடிமூன் றிரந்தவனி கொண்டாய், - படிநின்ற

நீரோத மேனி நெடுமாலே நின்னடியை

ஆரோத வல்லார் அறிந்து.












பூதத்தாழ்வார் வைபவம்  போன வருட பதிவு

பூதத்தாழ்வார்  திருவடிகளே சரணம்!!

ஓம் நமோ நாராயணா..



அன்புடன்

அனுபிரேம்...

2 comments:

  1. சிறப்பான பதிவு.
    பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்!!

    ஓம் நமோ நாராயணா..

    ReplyDelete
  2. பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதியை (2182-2281) மே 2018இல் நிறைவு செய்து, அதில் சில பாடல்களை என் வலைப்பூவில் எழுதியிருந்தேன். இன்று உங்கள் பதிவில் பூதத்தாழ்வாரைக் கண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete