13 October 2018

தென்னமலை, அம்மாபாளையம்.

ஓம் நமோ நாராயணா



தென்னமலை, அம்மாபாளையம், பெரம்பலூர்.





இந்த இடம்  அமைந்துள்ளது ஒரு வன பகுதியில்.



இந்த மலையின் மீது கோவில் ஏதும் இல்லை, இரு தூண்கள் உள்ளன. இவற்றிற்கே பூஜையும் ,ஆராதனையும் நடைபெறுகிறது.

சித்ரா பௌர்ணமி, புரட்டாசி  சனிக்கிழமைகளில் மட்டுமே மக்கள் இங்கு செல்ல அனுமதி.

இந்த மலைக்கு செல்ல படிகள் கிடையாது..பாறைகளை பிடித்துக்கொண்டு ஏற வேண்டும்.







மலை மீது தண்ணீர் , மின்சாரம், ஏதும் இல்லை ஒரு சின்ன கூடாரம் மட்டுமே.

நாங்கள் சென்றது சித்ரா பௌர்ணமிக்கு..

முதல் நாள் மாலை நான்கு மணிக்கே அனைவரும்  மலைக்கு ஏறிவிட்டனர்..,

 நாங்கள் ஏறும் போது இருட்ட ஆரம்பித்து விட்டது,

 பெருமாளே துணை என்று  நினைத்து செல்போனின் ஒளி துணையோடு ஏற ஆரம்பித்தோம் ......





வழி துணைக்கும் யாரும் இல்லை...அங்கு பாறையில் வரைந்துள்ள நாமமே நமக்கு  வழிகாட்டி அதை பற்றி...ஏறினோம்..

2 மணி நேரம் ஆனது ..நாங்கள் ஏறி முடிக்கவும் மலையில்  மணி அடிக்கவும் சரியாக இருந்து..ஏற்கனவே வந்த மக்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு வைத்து படைக்க ஆரம்பித்து  இருந்தனர்...


கோவிந்தா ..கோவிந்தா என்ற ஒலி எங்கும் ...அதே கீதத்தோடு அந்த தூண்களின் மேலே சென்று பூசாரி தீபம் ஏற்றுகிறார்..

இந்த ஒளி கீழே உள்ள கிராமம் வரை தெரியும்.

பூஜை  முடியவும்...

கொண்டு சென்ற உணவை உண்டு, அங்கு அங்கு உள்ள பாறைகளில் ..படுத்த படி  வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்...

புது அனுபவம்..தூக்கம் தான் வரவில்லை..புது இடம் , சூழல் அல்லவா..

ஆனால் போன் டவர் மட்டும் மிக அருமை... நிறைய இள வயதினர் பாட்டு கேட்டும், படம் பார்த்தும் என மகிழ்ந்து  இருந்தனர்..




முழு நிலவு



விடியற்காலையில்  மக்கள் அவரவர்  காட்டில் விளைந்த நிலக்கடலையை, வறுத்து அடுத்த பூஜைக்கு தயார் செய்தனர்..பூஜை முடியவும் அதை அனைவருக்கும் கொடுத்தனர்..

பின் அனைவரும் மலை இறங்க ஆரம்பித்தோம்...
வரும் போது...  தான் தெரிந்தது எத்தனை கடின பாதையை கடந்து சென்றோம் என ...

ஓம் நமோ நாராயணா










 அங்கு விடியலில் எடுத்த சூரியோதையம்..





தென்ன மலை 



வெட்ட வெளியில்  ஒரு வட்ட நிலவோடு...

எதிர்பாராமல் அமைந்த ஒரு  அருமையான பயணம்...


அங்கு நடைபெற்ற பூஜை யின் காணொளி ..








ஓம் நமோ நாராயணா



 684.   
பிறை ஏறு சடையானும்*  பிரமனும் இந்திரனும்*
முறையாய பெரு வேள்விக்*  குறை முடிப்பான் மறை ஆனான்*
வெறியார் தண் சோலைத்*  திருவேங்கட மலைமேல்*
நெறியாய்க் கிடக்கும்*  நிலை உடையேன் ஆவேனே


பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான பயன்களைத் தந்து அவர்களின் குறை தீர்ப்பாய்.  அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய். நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாகக் கிடக்கும் நன்னிலை உடையவன் ஆவேனே.


அன்புடன்,
அனுபிரேம்.



5 comments:

  1. மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் விவரித்துள்ளாய் அனு மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  2. மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் விவரித்துள்ளாய் அனு மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  3. புது கோவிலை தெரிந்து கொண்டேன் அனு .
    கோவில் படங்கள், காணொளி எல்லாம் மிக அருமை.

    ReplyDelete
  4. மறக்க முடியாத பயணமாக அமைந்திருக்கும்

    ReplyDelete