ஓம் நமோ நாராயணா
வேடனாக வந்த சீனிவாசன் :
பத்மாவதி ஒருமுறை வேதாசல மலை பகுதியில் தோழிகளோடு சுற்றி வந்தாள். அங்கே வேட்டைக்கு சீனிவாசன் என்ற வேடன் வந்தான். பத்மாவதியை பார்த்ததும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட, பத்மாவதி மறுத்துவிட்டாள்.
பின்னர் வேடனாக வந்தது ஸ்ரீமன் நாராயணன் என்பது தெரிந்ததும், பத்மாவதி சீனிவாசனை திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் சீனிவாசனிடம் திருமணத்திற்கான பணம் இல்லை.
ஏற்கனவே லட்சுமி தேவி பிரிந்து போய் விட்டதால் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் நாராயணன். இந்த சமயத்தில் நாரதர், குபேரனிடம் பணம் பெற்று திருமணத்தை நடத்தலாம் என யோசனை கூறினார்.
உடனே பெருமாள் குபேரனை அழைத்து, ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொன் கடன் வாங்கி கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார்.
தன்னை வழிபட வரும் பக்தர்கள் தரும் பணத்தை கலியுகம் முழுவதும் வட்டியாக தந்து விட்டு, கலியுகம் முடியும் போது அசலை தந்து விடுவதாக குபேரனிடம் தெரிவித்தார் நாராயணன். திருமணம் சிறப்பாக முடிந்தது.
திருமணத்திற்கு பிறகு பெருமாள் திருமலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அவருக்கு ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்பவர் கோயில் கட்டினார். கோயிலில் வழிபட தேவாதி தேவர்கள் எல்லாம் வந்தனர். பிரம்மனும் அங்கு வந்தார்.
அவர் பெருமாளிடம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உற்சவம் நடத்த அனுமதி கேட்டார். அதன்படி பிரம்மோற்சவம் நடந்தது.
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணர் என்ற சித்தரின் பீடம் இங்கு உள்ளது. பக்தர்கள் தரும் காணிக்கையை கணக்கு பார்த்து குபேரனிடம் கொடுப்பதில் பெருமாளுக்கு சிக்கல் ஏற்பட்டது.
காது குத்தும் இடத்தில் எடுத்த வேங்கடவன் படங்கள் |
எனவே தனது சகோதரனான கோவிந்தராஜனை அழைத்து, இந்த பணத்தை குபரேனிடம் கொண்டு சேர்ப்பது உனது பொறுப்பு
என்றார்.
அதன்படி கோவிந்தராஜன் கீழ்திருப்பதியில் தங்கியிருந்து வெங்கடாசலபதிக்கு சேரும் காணிக்கையை மரக்கால் மூலம் அளந்து குபேரனிடம் கொடுத்து வருகிறார்.
திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் -மலையப்பன் திவ்ய அலங்கார சேவை
687.
மன்னிய தண் சாரல்* வட வேங்கடத்தான்தன்*
பொன் இயலும் சேவடிகள்* காண்பான் புரிந்து இறைஞ்சிக்*
கொல் நவிலும் கூர்வேற்* குலசேகரன் சொன்ன*
பன்னிய நூற் தமிழ்-வல்லார்* பாங்காய பத்தர்களே (2)
(பகைவர்களைக்) கொல்லுதலைப் பயின்ற கூர்மையான வேலாயுதத்தையுடைய குலசேகராழ்வார், நிலை பெற்ற குளிர்ச்சியுள்ள சாரல்களையுடைய வடவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கிற பெருமானது,
பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளை ஸேவிப்பதற்கு ஆசைப்பட்டு வணங்கி அருளிச் செய்த ஆராய்ந்த நூல்களிற் கூறிய இலக்கணத்துக்கு , இசைந்த தமிழ்ப்பதிகத்தை கற்று வல்லவர் அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்.
ஸ்ரீ அனந்தாழ்வான் சன்னதி ,திருமலை (8)
சுவாமி புஷ்கரணி ( 7)
திருமலையில் (6)
கோதையும் , பெரியாழ்வாரும் - திருமலை வேங்கடவன் தரிசனம் 5
முழங்கால் முறிச்சான் - திருமலை வேங்கடவன் தரிசனம் 4..
திருமலை வேங்கடவன் தரிசனம் 3....காளி கோபுரம்
திருமலை வேங்கடவன் தரிசனம் 2 ..
உடன் வந்து தரிசித்து, ரசித்த அனைவருக்கும் நன்றிகள் பல..
மற்ற தீர்த்தங்களை காணும் பாக்கியம் அந்த பயணத்தில் கிட்டவில்லை ..மீண்டும் செல்லும் போது அவன் அருளால் காணும் பாக்கியம் கிடைக்கும்.
இந்த திருமலை பயணத்தில் எடுத்த படங்களுடன், இணையைத்திலிருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் திருமலை பிரம்மோற்சவம் படங்கள் வழியும் சில பதிவுகள் இங்கு தந்ததில் மிக மகிழ்ச்சி.
வேங்கடவன் திருவடிகளே சரணம்
ஓம் நமோ நாராயணா.
மற்ற தீர்த்தங்களை காணும் பாக்கியம் அந்த பயணத்தில் கிட்டவில்லை ..மீண்டும் செல்லும் போது அவன் அருளால் காணும் பாக்கியம் கிடைக்கும்.
இந்த திருமலை பயணத்தில் எடுத்த படங்களுடன், இணையைத்திலிருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் திருமலை பிரம்மோற்சவம் படங்கள் வழியும் சில பதிவுகள் இங்கு தந்ததில் மிக மகிழ்ச்சி.
வேங்கடவன் திருவடிகளே சரணம்
ஓம் நமோ நாராயணா.
அனுபிரேம்
No comments:
Post a Comment