17 September 2018

திருமலை வேங்கடவன் தரிசனம் ..

ஓம் நமோ நாராயணா



திருமலை வேங்கடவன் தரிசனம்  நடைபாதை வழியாக...

சில மாதங்களுக்கு முன் நாங்கள் சென்ற பயணத்தின் படங்கள் சில தகவல்களுடன்...



















திருமலை மலை அல்லது சேஷாசலம், நாம் வானில் இருந்து முழுவதுமாக பார்க்கும் பொழுது ஏழு மலைகளுடன் ஒரு பாம்பு போல் காட்சியளிக்க அதனால் திருமலை சேஷாசலம் என்று பெயர் பெற்றது.


வேங்கடகிரி என்றும், சப்தகிரி என்றும் பல பெயர்களில்
அழைக்கப்படும் இம்மலை 7 மலைகளால் ஆனது. சப்த
என்பதற்கு 7 என்பது பொருள். கிரி என்னும் சொல் மலைகளைக்
குறிக்கும். எனவே சப்தகிரி என்றும் ஸப்த பர்வதங்கள் என்றும்
இந்த மலை குறிக்கப்படுகிறது.


அந்த 7 மலைகள் எவையெனில்


வேங்கடாத்ரி

வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாதல்.எனவே பாவங்கள் எல்லாம் நாசமாகும் இடம் என்று பொருள். வேங்கடம் என்ற சொல்லுக்கே பாவங்களைச் சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டு. வேங்கடாத்ரி ஆயிற்று.

சேஷாத்ரி

ஆதிசேடனே இங்கு எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு மலை உருவில் தோன்றியுள்ளான். எனவே சேஷாத்ரியாயிற்று.

வேதாத்ரி

வேதங்கள் எல்லாம் மலை உருவில் ஸ்ரீனிவாசனை வழிபடுவதால் வேதாத்ரி எனவும் வேதகிரி எனவும் வழங்கப்படுகிறது.


கருடாத்ரி

திருமாலின் வாகனமாகிய கருடன் இம்மலையை (எம்பெருமானின் அவதாரத்தின் பொருட்டு) எடுத்துவந்து இவ்விடத்தில் வைத்ததால் கருடாத்ரி ஆனது.


விருஷபாத்தரி

விருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு இம்மலையில்
திருமால் மோட்சம் அளித்தார். அவன் வேண்டுகோளுக்கிணங்க அவன் பெயராலேயே விருஷபாத்ரி எனமொழியப்படுவதாக ஐதீஹம்.

அஞ்சனாத்ரி

அனுமனின் தாய் அஞ்சனை. அவள் இந்த மலையிலே தவம் செய்தாள். மகப்பேறு வேண்டினாள். ஆதிவராஹமூர்த்தியின் அருளால் ஆஞ்சநேயனைப் பெற்றாள். அஞ்சனை தவமியற்றியதைக்கொண்டு அஞ்சனாத்ரி ஆயிற்று.


ஆனந்தாத்ரி

ஆதிசேடனும் வாயு தேவனும் தங்களில் யார் பலவான் என்பதைக் காண்பிக்க தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு மேருமலையின் சிகரங்களை ஆளுக்கொன்றாகத் தகர்த்துக் கொண்டு இப்பெருமாள் முன்னிலையில் வீழ்த்த,
பலத்தில் இருவரும் சமமானவர்களே என்று பெருமாளின்
திருவாக்கும்,  திருவருளும் பெற்று ஆனந்தமுற்றார்கள்.
ஆதலின் ஆனந்தாத்ரி ஆயிற்று.


பழங்கால புராணங்கள்  இந்த மத்திய கிழக்கு தொடர்ச்சி மலையை ஒரு பெரிய பாம்பின் உருவத்துடன் ஒப்பிடுகிறது.

ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனேஷ்வர் கோயில் அதன் வாலிலும்,

அகோபிலம் நரசிம்மர் கோயில் அதன் வயிற்று பகுதியிலும்,

திருமலை கோயில் அதன் முதுகிலும்,

காளஹஸ்தி அதன் வாயிற்பகுதியிலும் அமைந்திருப்பதாக கூறுகிறது.





திருமலை அமைந்துள்ள வேங்கடாத்ரி மலை மற்ற மலைகளைவிட சிறிதாகவும் மற்ற மலைகள் சூழபெற்றும் அமைந்துள்ளது



மலைப்பாதையில் அலிபிரி என்னும் அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு 11 கி.மீ., தூரம் உள்ளது. திருப்பதியில் இருந்து பேருந்தில் அலிபிரிக்கு செல்லலாம்.  "அலிபிரி' என்றால் "அடிப்படி' என்று பொருள்.

அலிபிரியில் கம்பீரமாக இரு சிறகுகளை விரித்த நிலையில் பெருமாளை வழிபாடு செய்யும் நிலையில் கூப்பிய கைகளுடன் மிக உயரமான கருடாழ்வார் காட்சி தருகிறார்




திருமலை ஸ்ரீவாரி பிரமோத்சவம் இரண்டாம் நாள் சின்ன சேஷ வாகனம் - ஸ்வாமி மலையப்பன் பாண்டுரங்கன் திருக்கோலத்தில் திவ்ய சேவை.







677.   
ஊன் ஏறு செல்வத்து*  உடற்பிறவி யான் வேண்டேன்*
ஆனேறு ஏழ் வென்றான்*  அடிமைத் திறம் அல்லால்*
கூன் ஏறு சங்கம் இடத்தான்*  தன் வேங்கடத்துக்*
கோனேரி வாழும்*  குருகாய்ப் பிறப்பேனே (2)


நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.


தொடரும்....



அன்புடன்
அனுபிரேம்


10 comments:

  1. மிக அருமையான பதிவு.
    புரட்டாசி மாதப்பிறப்புக்கு ஏற்ற பதிவு.
    திருமலையில் உற்சவம் நடந்து கொண்டு இருக்கிறது.
    தொலைக்காட்சியில் கண்டு களித்துக் கொண்டு இருக்கிறேன். பக்தி சேனலில்.(தெலுங்கு)
    படங்கள், பாடல்கள், திருமல பற்றிய விரிவான செய்திகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  2. அழகான படங்கள்.சிறப்பான தரிசனம். நன்றி.

    ReplyDelete
  3. அழகான படங்கள், கூடவே அருமையான, தெரியாத தகவல்கள்.

    ReplyDelete
  4. திருமலையில் உற்சவம் நடந்து கொண்டு இருக்கும் இவ்வேளையில் இனிய பதிவு...

    வாழ்க நலம்...

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    மிக அழகான படங்கள்..அருமையான திருவேங்கடத்தான் தரிசனம். எம்பெருமான் ஆதிஷேசன் குடைப் பிடிக்க கம்பீரமாக இடுப்பில் இருக்கை ஊன்றியபடி, ஒருகால் முன் வைத்து நம்மை காக்க ஒடி வரும் கோலம் கண்டு சிலிர்த்துப் போனேன். அத்தனையும் அழகு. புரட்டாசி மாதத்திற்கேற்ற பதிவு. படங்களும், பாடல்களும் மெய்யுருக வைத்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. மிக அழகான படங்கள். தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. படங்கள் செமையா இருக்கு அதுவும் ஸ்வாமியின் படங்கள் அனு எங்கருந்து எப்படி எடுத்தீங்க? அனுமதி உண்டா?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மலையப்பன் படங்கள் எல்லாம் முக நூலில் கிடைத்தவை ..அங்கு எடுக்க அனுமதி உண்டு ..ஆனால் நேரில் சென்றாலும் நம்மால் எடுக்க இயலாது அவ்வளவு கூட்டம்..

      Delete