தொடர்ந்து வாசிப்பவர்கள்

08 September 2018

ஒவ்வொரு பூக்களுமே

வாழ்க வளமுடன்...ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..

(ஒவ்வொரு..)
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே..
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்..
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்..மனமே ஓ மனமே நீ மாறிவிடு..
மலையோ.. அது பனியோ..
நீ மோதிவிடு..உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது

எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்..

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்

யாருக்கில்லைப் போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
(மனமே..)
(ஒவ்வொரு..)

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்..

இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு..மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்

தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்..

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..


பெங்களுரு cuppon park ல் எடுத்த படங்கள்... சினிமா பாடல் வரிகளுடன்..
அன்புடன்
அனுபிரேம்8 comments:

 1. அழகான படங்கள். பாடலும் எனக்கு பிடித்த பாடல் தான்.

  ReplyDelete
 2. மலர்களிலே பல நிறம் கண்டேன்.. திரு மாலவன் வடிவம் அதில் கண்டேன்...

  ReplyDelete
 3. பாடலுடன் படங்களும் அருமை.. அழகு!...

  வாழ்க நலம்...

  ReplyDelete
 4. அழகு அழகு.. பூக்கள் என்றாலே கண்ணுக்கு குளிர்மை.. மனதுக்கு இனிமை.

  ReplyDelete
 5. கண்ணுக்குக் குளிர்ச்சியாக, மனதிற்கு இதமாக இருந்த பூக்கள்.

  ReplyDelete
 6. அருமையான பாடல். அழகான பூக்களின் படங்கள்.

  ReplyDelete
 7. துளசி: படங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன

  கீதா: ஹையோ அனு செமையா இருக்கு அதுவும் முதல் படம்..ஆஹா. ஒவ்வொன்னும் என்ன கலர்பா...ரொம்ப அழகா எடுத்துருக்கீங்க....நானும் படங்கள் எஎல்லாம் ட்ராஃப்டில் போட்டு வைச்சுருக்கேன் பதிவு எழுதலை பாதில இருக்கு...போடணும் எப்பனு தெரியலை...

  கீதா

  ReplyDelete