07 September 2018

சோயா கட்லெட்

வாழ்க வளமுடன்



சோயா கட்லெட்இன்றைய சுவையான பதிவில்..








தேவையானவை..



சோயா உருண்டைகள் - 1 கப்,

வெங்காயம்  -1
தக்காளி          -1
கேரட்                -1
முட்டைகோஸ்


மிளகாய் தூள்- 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை -1 டேபிள்ஸ்பூன்

மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப,

பிரெட் தூள் -  1 கப்

எண்ணெய் - தேவைக்கேற்ப.






செய்முறை

சோயாவை வேகவைத்து , நீர் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.




கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் , தக்காளி , காரட், கோஸ் சேர்த்து  வதக்கவும் ..பின் மிளகாய் தூள், உப்பு , சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும் ..



அதில் மிக்சியில் மசித்த சோயாவை சேர்த்து , நன்கு வதக்கவும்.







பின் அதில் பொடித்த பிரட் தூள் சேர்த்து, கட்லெட் வடிவத்திற்கு உருட்ட வேண்டும்.






 அந்த உருண்டைகளை  மாவில் பிரட்டி 

தோசை கல்லில் எண்ணெய் விட்டு 
வேகவைத்து எடுத்தால் சோயா கட்லெட் தயார்..









அன்புடன்
அனுபிரேம்


11 comments:

  1. சோயா கட்லெட்...

    புதிதாக இருக்கின்றது..

    எளிய செய்முறையும் அழகான படங்களும் - அருமை..

    ReplyDelete
  2. ​சோயா வைத்து எதுவும் செய்ததில்லை. இது பார்க்க அழகாக இருக்கிறது. சுவையும் நன்றாகவே இருக்கும் என்று தெரிகிறது. ஆமாம், அதில் சர்க்கரை எதற்காக?

    ReplyDelete
    Replies
    1. சுவை நன்றாகவே இருந்தது..

      இது போன்ற பதார்த்தங்களில் சர்க்கரை சேர்க்கும் போது சுவை இன்னும் நன்றாக இருக்கும்...

      Delete
  3. சோயா - எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. சோயா GRAVEY , பிரியாணி எல்லாம் எங்களுக்கும் பிடிப்பது இல்லை..

      ஆனால் இந்த கட்லெட்ல் சோயாவின் சுவை அதிகமாக இல்லாததால் நன்றாகவே இருந்தது..

      Delete
  4. அனு செமையா இருக்கு கட்லெட். மஷ்ரூம் கட்லெட்டும் நன்றாக இருக்கும் என்று (மஷ்ரூமில் சுவை உண்டா என்ன?) என் வீட்டில் நான் செய்து கொடுக்கும் போது சொல்வார்கள். யாராவது உறவினர் கேட்டால் செய்வேன். நான் சாப்பிடுவதில்லை.

    சரி எபி திங்க பதிவுக்கு அனுப்பலாமே...அனு!!??

    கீதா

    ReplyDelete
    Replies
    1. MUSROOM எப்படி செஞ்சாலும் எனக்கு பிடிக்கும் கா...ரொம்ப இஷ்டம்..

      திங்கள் பதிவில் சமையல் வல்லுனர்கள் பலர் இருக்கும் போது ...இப்பொழுது தான் கற்று கொள்ளும் நான் எங்க வரது...

      Delete
  5. சோயா எங்க வீட்டு பேவரிட். நிச்சயம் செய்து பார்க்கவேண்டும். பார்க்க நன்றாக இருக்கு.

    ReplyDelete