ஓம் நமோ நாராயணா
காளி கோபுரம், திருமலை
மலைப்பாதையில் மொத்தம் மூன்று கோபுரங்கள் அமைந்துள்ளன.
2ஆயிரத்து100 படிகளைக் கடந்தவுடன் குருவமண்படத்தை அடுத்து காளிகோபுரம் உள்ளது.
17ம் நூற்றாண்டில் மட்லகுமார அனந்தராயன் என்னும் மன்னனே இந்த மலைப் பாதை கோபுரங்களை கட்டியவர்.
இக்காளி கோபுரத்தை அடைந்து விட்டாலே திருப்பதி மலையில் பாதி ஏறிவிட்டது போலாகி விடும்.
செங்குத்தாக இருக்கும் படிகள் காளி கோபுரத்துடன் முடிவடைகின்றன.
இக்கோபுரத்தில் நாமம், சங்கு, சக்கரம் ஆகிய திருச்சின்னங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன.
இரவு நேரத்தில் தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் இவ்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கோபுரம் உள்ளது.
இனி மலைப்பாதையில் சரிவான படிகளே பெரும்பாலும் .
முற்காலத்தில் காளிகோபுரத்தில் மலையேறும் பக்தர்களுக்கு தண்ணீர்பந்தல் இருந்ததாகத் தெரிகிறது. தற்போது பெரிய கடைத்தெருவாக காட்சி தருகிறது. சகல பதார்த்தங்களும் இங்கு கிடைக்கின்றன.
இங்கு பக்தர்கள் சற்று இளைப்பாறி பயணத்தை தொடர்கின்றனர்.
நின்று இளைப்பாறும் இடத்தில் அழகிய காட்சிகள்...
திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் - ஸ்வாமி மலையப்பன் காலிங்க நர்த்தன திருக்கோலம்.
காளி கோபுரம், திருமலை
![]() |

679.
பின் இட்ட சடையானும்* பிரமனும் இந்திரனும்*
துன்னிட்டுப் புகல் அரிய* வைகுந்த நீள் வாசல்*
மின் வட்டச் சுடர்-ஆழி* வேங்கடக்கோன் தான் உமிழும்*
பொன்-வட்டில் பிடித்து உடனே* புகப் பெறுவேன் ஆவேனே
பின்னலுடைய சடையணிந்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் விரைந்து உன்னைக் காண்பதற்காக வைகுந்தத் திருவாசலில் குழுமி நிற்கின்றனர். நீ மின்னலைப் போல் சுழலும் வட்ட வடிவு கொண்ட சக்கரத்தைக் கொண்டுள்ளாய். ..திருவேங்கடத்தலைவா.
நீ உன் எச்சிலை உமிழும் போது அதனைத் தாங்குவதற்காக பொன்வட்டிலைப் பிடித்து நின்று என்றும் உன்னுடனே எல்லா இடத்திற்கும் செல்லும் பேறு பெறுவேன் ஆவேனே.
அன்புடன்
அனுபிரேம்

மிக அழகான படங்களுடன் பதிவு மிக அருமை அனு.
ReplyDeleteநாங்கள் இரவு நேரத்தில் திருமலையின் மலைப் பாதையைக் கடந்தோம்...
ReplyDeleteமான் கூட்டங்களை அரையிருளில் கண்டு அவற்றுக்கு உண்பதற்குக் கொடுத்தோம்..
மறுமுறை பகல் பொழுதில் நடக்க வேண்டும் என்று ஆவல்..
பெருமாள் எப்படி நடத்துகின்றாரோ!..
அழகிய படங்கள்.. வாழ்க நலம்...
படங்கள் வெகு துல்லியம்.
ReplyDeleteமிக அருமையான படங்கள்.. கோபுர சிற்ப வடிவம் ஒரு வித்தியாசமாக இருக்கு.
ReplyDeleteபடங்கள் அழகு
ReplyDeleteநன்றி சகோதரியாரே
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதை 1 வது படம் தருகிறது. எல்லாவற்றையும் அழகாக பதிவாக்கிறீங்க அனு. படங்கள் தகவல்கள் அருமை.
ReplyDeleteபடங்கள் அழகு.
ReplyDeleteதிருமலைக்கு நடைப்பயணம் - எப்போது வாய்க்குமோ! திருப்பதி சென்று 30 வருடங்கள் ஆகிவிட்டது!
தொடர்கிறேன்.