29 September 2018

வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் திருக்கோவில்

 தென்கலை வரதராஜ பெருமாள் திருக்கோவில்


பாண்டிச்சேரியில் ,வில்லியனூரின் பிரதான சாலையில் அமைந்துள்ள திருக்கோவில் ..








  ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள்  நின்ற திருக்கோலத்தில் அழகிய புன்னகையுடன் காட்சி அருள்கிறார் .









மதில் மேல் கருடாழ்வார்..



இங்கு ஆண்டாள்,சக்கரத்தாழ்வார் , பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர், சக்ரவர்த்தி திருமகன் மற்றும் அழ்வார்கள் என அனைவருக்கும் தனி தனி சன்னதிகள் உள்ளன..















கலைநயத்தோடு மேற்கூரைகள்







ராமர் சன்னதியில் ராமர்,  சீதா , லக்ஷ்மணர் மற்றும்  சிறிய திருவடியுடன் காட்சி அருள்கிறார் ...மிக அழகிய திருக்கோலம்..

பார்க்க பார்க்க தெவிட்டாத திருக்காட்சி.







சாலை அருகே இருப்பினும் , கோவிலின் உள்ளே மிக அமைதி...


சிறிய திருக்கோவில் ..ஆனாலும் நிறைவுடன் காண கிடைக்கும் திருக்கோவில்

 ஓம் நமோ நாராயணா..



682.   
மின் அனைய நுண்ணிடையார்*  உருப்பசியும் மேனகையும்*
அன்னவர்தம் பாடலொடும்*  ஆடல் அவை ஆதரியேன்
தென்ன என வண்டினங்கள்*  பண் பாடும் வேங்கடத்துள்*
அன்னனைய பொற்குவடு ஆம்*  அருந்தவத்தேன் ஆவேனே


முள்செடியாய் நின்றால் எனக்கு மட்டுமே பயன். எம்பெருமானுக்கோ அடியவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. அதனால் திருவேங்கடமலையில் இருக்கும் பல சிகரங்களுக்குள் ஒரு சிகரமாக நான் நின்றால் இறைவன் இருக்கும் இடம் இது என்று அடியவர்களுக்கு உணர்த்தும் பேறு கிடைக்கும். (சிகரம் என்றால் மலைச் சிகரம் என்றும் கோபுரம் என்றும் பொருள் தரும்).

மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினை உடைய ஊர்வசியும் மேனகையும் அவர்களைப் போன்றவர்களும் பாடியும் ஆடியும் மகிழ்விக்கும் இன்பங்களை நான் விரும்பேன். அவர்களின் பாடல் ஆடலைவிட இனிமையாக தேனினைப் போல் (தென்ன வென) வண்டுக் கூட்டங்கள் பண்களைப் பாடி ஆடும் திருவேங்கடத்துள் அழகு மிகுந்த பொற்சிகரமாக ஆகும் அரிய தவத்தை உடையவன் ஆவேனே.


அன்புடன்,
அனுபிரேம்










5 comments:

  1. அருமையான பதிவு.
    படங்கள் கோவில் இருப்பிடம் எல்லாம் மிக அருமை
    பாசுரம் பாடி மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  2. வரந்தரும் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் தரிசனம்...
    அருமை.. அருமை...

    ஹரி ஓம் நமோ நாராயணாய...

    ReplyDelete
  3. அழகான கோயில். உங்கள் மூலம் நாங்கள் தரிசனம் கண்டோம். நன்றி.

    ReplyDelete
  4. படங்களும் பகிர்வும் நன்று.

    ReplyDelete
  5. அனு நான் பாண்டியில் இருந்தப்ப இந்தக் கோயிலுக்கு நிறைய விசிட் அடிச்சிருக்கேன். அதே போல பஞ்சவடீ ஆஞ்சூ கோயிலுக்கும். வில்லியனூர் கோயிலில்தான் என் மகனின் நண்பரின் அக்கா திருமணம் நடந்தது.

    படங்கள் எல்லாம் அழகு!

    கீதா

    ReplyDelete