01 October 2018

கோதையும் , பெரியாழ்வாரும் - திருமலை வேங்கடவன் தரிசனம் 5

ஓம் நமோ நாராயணா








வரவேற்கும் வேங்கடாத்ரி:


 முழங்கால் முறிச்சானிலிருந்து சற்று தூரம் நடந்தால் வேங்கடாத்ரி மலை வருகிறது. இங்கு பரமனுக்கு பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும், பாவை பாடிய கோதையும் காட்சி தருகின்றனர்.



திருமலை ஸ்தல வரலாறு

கிருஷ்ணாவதாரத்தை முடித்து பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார்.  பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் பெருகின. மீண்டும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டி, காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் யாகம் தொடங்கினர்.


 யாகத்தை காண வந்த நாரதர், ""யாகத்தின் பலனை யாருக்குத் தரப்போகிறீர்கள்?'' என்று முனிவர்களைக் கேட்டார். பலனை சாந்தமான மூர்த்திக்கு தருவதென்று முடிவு செய்தனர். மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு முனிவர் வைகுண்டம் சென்றார்.





திருமால் பிருகுமுனிவரை கண்டு கொள்ளாமல் இருக்கவே, அவர் மார்பில் எட்டி உதைத்தார். திருமால் கோபம் கொள்ளாமல் உதைத்த பாதத்தை தடவி கொடுத்தார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர்.


மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார். லட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் திருமகளை  தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார்.




அவருக்கு பசித்தது.இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் கூற  லட்சுமி வருத்தமடைந்தார். நாரதர் அவரிடம் திருமாலின் பசியைப் போக்க உபாயம் சொன்னார்.

அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, லட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றார்.

மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொரிந்தது. பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொரிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான்.





கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள்ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார்.

 அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள்.

திருமாலும் அன்புடன் வகுளாதேவியை "அம்மா' என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு "சீனிவாசன்' (செல்வம் பொருந்தியவன்)என்று பெயரிட்டாள்.

தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள்.





இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான்.

யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது.

தாமரைக்கு "பத்மம்' என்று பெயர் உண்டு.

எனவே குழந்தைக்கு "பத்மாவதி' என்று பெயரிட்டான்.ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள்.

ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள்.




சீனிவாசப் பெருமாளுக்கும், பத்மாவதிக்கும் திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் சீனிவாசப்பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார்.

சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார்.

பத்மாவதி அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள்.

சீனிவாசப் பெருமாள் தினமும் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது.




இத்துடன் மலைப்பாதை நிறைவுபெற்று, சாலை வழியே வரும் பாதையைச் சந்திக்கிறோம்.

திருமலையை எட்டிவிட்டோம். சுப்ரபாத ஒலி தெருவெங்கும் முழங்குகிறது. படியேறி களைப்பை மறந்து திருமலை வேங்கடத்தானின் ஆனந்த நிலையத்தை காணும் ஆர்வம் எழுவதை நம்மால் உணரமுடிகிறது.


திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் நான்காம் நாள் சர்வ பூபால வாகனம் திவ்ய சேவை.












104.   
என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*
மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய* 
மின்னு முடியனே!  அச்சோ அச்சோ* 
 வேங்கடவாணனே! அச்சோ அச்சோ  



வாமன வடிவோடு மகாபலியிடம் வந்த திருமால், தானம் பெறும் போது திரிவிக்ரமனாய் வளர்ந்து நின்றார். மகாபலியின் மகனான நமுசி, ""இது என்ன மாயச்செயல்! இவ்வாறு செய்வீர் என என் தந்தை சற்றும் நினைக்கவில்லை. முன்பிருந்த வாமனனாகவே மூன்றடி அளக்கவேண்டும்,'' என்று சொல்லி காலைப் பிடித்தான். அந்த நமுசியை வானை நோக்கி சுழற்றி வீசியவனே! ஒளி பொருந்திய கிரீடம் அணிந்தவனே! 

வேங்கட மலையில் (திருப்பதி) வாழ்பவனே! என்னை அணைத்துக் கொள்வாயாக. 



முழங்கால் முறிச்சான் - திருமலை வேங்கடவன் தரிசனம் 4..

திருமலை வேங்கடவன் தரிசனம் 3....காளி கோபுரம்

திருமலை வேங்கடவன் தரிசனம் 2 ..

அன்புடன்

அனுபிரேம்

6 comments:

  1. ஸ்தல வரலாறும், படங்களும் மிக அருமை.

    //வேங்கட மலையில் (திருப்பதி) வாழ்பவனே! என்னை அணைத்துக் கொள்வாயாக.//

    இந்த பேறு கிடைத்தால் எவ்வளவு இன்பமோ அவ்வளவு இன்பம் பதிவை படித்த போது.
    புரட்டாசி மாதம் பெருமாள் சிந்தனைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஹரி ஓம் நமோ நாராயணாய!...

    வாழ்க நலம்....

    ReplyDelete
  3. மிக அருமை. அதெதுக்கு குங்குமத்தை அப்படிக் கொட்டி.. ஏதோ இரத்தம் போல அழகைக் கெடுத்து வைத்திருக்கிறார்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா..

      அங்க படி எல்லாம் வேண்டுதல் போல கீழிருந்து இப்படி மஞ்சளும் குங்குமமும் வச்சிட்டிடே போறாங்க மக்கள் ஸ்..

      அந்த இடத்தில படிகள் முடிவதால் எல்லாத்தையும் இப்படி கொட்டி வைகுராங்க என்ன பண்ண..

      ஆன இந்த மாதரி படியெல்லாம் வைப்பதில் எங்களுக்கு உடன் பாடு இல்ல ..இதுனால எல்லா இடமும் ஒரு மாதரி அசுத்தமா தெரியுது.. இந்த இடங்களில் தேவஸ்தான பராமரிப்பு மிக அருமை ..நாங்க ஏறும் போது வழியெல்லாம் ஊழியர்கள் சுத்தம் பண்ணிடே இருக்காங்க..

      அவங்க செய்யும் போது நாமும் ஒத்துழைப்பு குடுக்கணும் இல்லையா..அது பல பேருக்கு வரமாட்டேங்க்குது...

      Delete
  4. அழகான படங்கள்.

    பத்மாவதி ஸ்ரீனிவாச கல்யாணத்தில் இந்தக் கதை சொல்வார்கள். கேட்ட கதை என்றாலும் மீண்டும் மீண்டும் கேட்பதில் அலுப்பில்லை.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. துளசி: படங்கள் எல்லாம் அழகு. தகவல்களும் அருமை.

    கீதா: படம் எல்லாம் நல்லாருக்கு அனு. அப்புறம் இந்தக் கதையும் கேட்டதுண்டு. படத்தில் கூட இப்படித்தானே வரும் இல்லையா? எப்போதோ சின்ன வயதில் பார்த்த நினைவு. தொடர்கிறோம்

    ReplyDelete