10 October 2018

சுவாமி புஷ்கரணி ( 7)



 ஓம் நமோ நாராயணா





சுவாமி புஷ்கரணி: திருப்பதியில் உள்ள தெப்பக்குளத்தை சுவாமி புஷ்கரணி என்பர்.




கருடபகவான் இந்த குளத்தை வெங்கடாசலபதிக்காக அமைத்துள்ளதாக நம்பிக்கை. பக்தர்களும் இந்த குளத்தில் நீராடலாம்.

இந்த தீர்த்தத்தில் உலகிலுள்ள மூன்று கோடி தீர்த்தங்கள் கலந்திருப்பதாக சொல்லப்படுகிறது.



மார்கழி மாதத்தில் 12வது நாளில் "முக்கோட்டி துவாதசி' இந்த குளக்கரையில் நடக்கும். அன்று பகவான் இந்த குளத்தில் நீராடுவதாக நம்பிக்கை.





அந்த நாளில் கங்கை நதியும் இந்த  தீர்த்தத்திற்கு வந்து நீராடி தன்னிடம் சேர்ந்துள்ள பாவங்களை கழுவுகிறது. இந்த குளத்தின் மேற்கு கரையில் வராக சுவாமி கோயிலும், தென்கரையில் வேங்கடவன்' கோயிலும் அமைந்துள்ளது.





பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இங்கு தெப்பத்திருவிழா நடக்கும்.

பிரம்மோற்ஸவத்தின் கடைசிநாளில் "சக்ர ஸ்நானம்' நிகழ்ச்சி இந்த தீர்த்தத்தில் நடத்தப்படும்.

தை மாதத்தில் ராமகிருஷ்ண தீர்த்த திருவிழாவும்,
மாசி பவுர்ணமியில் குமாரதாரா தீர்த்த திருவிழாவும்,
பங்குனி பவுர்ணமியில் தும்புரு தீர்த்த திருவிழாவும்,
கார்த்திகை மாத க்ஷிராப்தி ,
துவாதசியில் சக்ர தீர்த்த விழாவும் நடக்கிறது.







திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் - கருட சேவை திவ்ய தரிசனம்.








685.   
செடியாய வல்வினைகள் தீர்க்கும்*  திருமாலே*
நெடியானே வேங்கடவா*  நின் கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்*  அரம்பையரும் கிடந்து இயங்கும்*
படியாய்க் கிடந்து*  உன் பவளவாய் காண்பேனே (2)


உன் கோயிலுக்கு வரும் வழிகள் பல இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்களில் சிலர் நான் வழியாய்க் கிடந்தாலும் என் மேல் வராமல் வேறு வழியாய் உன் கோயிலை அடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.

பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள் மணாளா.

 நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பவனே நெடியவனே.

திருவேங்கடவா... உன் கோயிலின் வாசலில் அடியவர்களும் வானவர்களும் அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.


திருமலையில் (6)

கோதையும் , பெரியாழ்வாரும் - திருமலை வேங்கடவன் தரிசனம் 5

முழங்கால் முறிச்சான் - திருமலை வேங்கடவன் தரிசனம் 4..

திருமலை வேங்கடவன் தரிசனம் 3....காளி கோபுரம்

திருமலை வேங்கடவன் தரிசனம் 2 ..
அன்புடன்,
அனுபிரேம்

5 comments:

  1. புஷ்கரணி கண்டேன். மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  2. போகும்போதெல்லாம் தரிசிக்க தவறுவதில்லை

    ReplyDelete
  3. அழகான படங்களுடன் வேங்கடவனின் தரிசனம்...
    மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    ReplyDelete
  4. புஷ்கரணி தரிசனம் செய்தோம் மிக அருமை.
    எனக்கு பிடித்த பாசுரம் பதிவு நன்றி.

    ReplyDelete